பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் அதிகாரம் 111

11. புணர்ச்சி மகிழ்தல்

(காதலர் இருவரும் இன்பம் நுகர்ந்த மகிழ்ச்சியைக் கூறுவது)

கண்டு, கேட்டு,உண்டு, உயிர்த்து,உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடிகண்ணே உள. f{{}} ஆசையோடு பார்ப்பது, அன்பான சொற்களைக் கேட்பது, அனைத்து மகிழ்வது, அனுபவித்துச் சுவைப்பது, முத்தம் இடுவது ஆகியவற்றை ஒருங்கே ஒரே நேரத்தில் பெறுகின்ற இன்பம் அழகுமிக்க பெண் இடத்தில் மட்டுமே உள்ளது. (கண், காது, உடல், வாய், மூக்கு ஆகிய ஐந்து புலன்களாலும் ஒரே வேளையில் பெறக்கூடிய இன்பம்)

பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து. , If(X2 எத்தனையோ நோய்களைக் குணப்படுத்த வெவ்வேறு மருந்துகள் இருக்கின்றன. ஆனால், அழகான பெண்ணினால் உண்டான காமநோயைக் குணப்படுத்தக் கூடிய மருந்து, அவளாகவே இருக்கின்றாள். இது வியப்பாக இருக்கிறது அல்லவா?

தாம் வீழ்வார் மென் தோள்-துயிலின் இனிதுகொல்தாமரைக்கண்ணான் உலகு? f f{}3 தான் காதலிக்கும் காதலியின் மென்மையான தோளைத் தழுவிக் கொண்டு, துங்குவதிலே கிடைக்கக் கூடிய இன்பத்தைக் காட்டிலும், திருமாலின் வைகுந்தத்தில் கிடைக்குமா? நீங்கின் தெறுஉம், குறுகுங்கால் தண்ணென்னும், தி யாண்டுப் பெற்றாள், இவள்? 1104 காதலி என்னை விட்டுப் பிரிந்து சென்றால், என் உடல் சுடுகிறது; அவள் நெருங்கி வந்ததும் குளிர்ச்சியைத் தருகிறது. இத்தகைய நெருப்பை அவள் எங்கே இருந்து தான் பெற்றாளோ? 229