பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருககுறள் 6:5ாய 5g இன்பம்

வேட்ட பொழுதின் அவை அவை போலுமேதோட்டார் கதுப்பினாள் தோள். 105 அழகான மலரின் இதழைப்போல, அருமையான மணமும் மென்மையான கன்னங்களை உடைய காதலியின் சேர்க்கையில், நான் உள்ளத்தில் எந்தெந்தப் பொருளை விரும்பி நினைக்கின்றேனோ, அந்தந்தப் பொருளாகவே அவளுடைய உறுப்புகள் எனக்கு இன்பம் அளிக்கின்றன.

உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான், பேதைக்கு அமிழ்தின் இயன்றன, தோள். 1106 அவளை விரும்பித் தழுவும் போதெல்லாம், உயிரும் உள்ளமும் இன்புற்று திளைப்பதால், இவளுடைய தோள்கள், முதுமை வராமல் தடுத்து, இளமை இன்பம் அளிக்கக் கூடிய அமுதத்தால் செய்யப்பட்டது போலும்,

தம்இல் இருந்து, தமது பாத்து உண்டற்றால்அம்மா அரிவை முயக்கு. 1107 இவளைக் கட்டித் தழுவுகின்ற இன்பம் எப்படிப்பட்டது என்றால், தன்னுடைய சொந்த முயற்சியால் தேடிய பொருளை, தன் இல்லத்தில் இருந்து, பிறருக்குக் கொடுத்து உதவி தானும் பகிர்ந்து உண்டு வாழ்வதைப் போன்றதாகும்.

வீழும் இருவர்க்கு இனிதே-வளி இடை போழப் படாஅ முயக்கு. 1108 ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல், கட்டித் தழுவிக் கொண்டு, இருப்பதை இருவருமே விரும்புகின்றனர். இருவருக்கும் மத்தியில் காற்றுக் கூடப் புகுந்து, பிளவு உண்டாக்க முடியாதபடி இறுகத் தழுவிக் கொண்டி ருப்பது இன்பம் அளிப்பதாகும்.

230