பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் அதிகாரம் 112

அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல மறு உண்டோ, மாதர் முகத்து! ff #7 முழுவதும் குறைந்து பிறகு சிறிது சிறிதாக வளருகின்ற நிலவுக்கு இருப்பது போன்ற களங்கம் ஏதேனும் இவளுக்கு இருக்கின்றதா? இல்லையே! பிறகு ஏன் இந்த விண்மீன்கள் தடுமாற வேண்டும்? மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல், காதலை-வாழி, மதி ! 1118 சந்திரனே! உன்னாலும் என் காதலியின் அழகு முகத்தைப் போல் ஒளி வீசும் வல்லமை பெறுவாயானால், நீயும் ஒருவனால் காதலிக்கப்படுவாய், பிறகு, நானும் உனக்கு வாழ்த்துக் கூறுவேன். மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்திஆயின், பலர் காணத் தோன்றல் -மதி ! 1119 நிலவே மலர் போன்ற கண்ணுள்ள என் காதலியின் முகம் போல், ஒளிவீசும் பெண்ணாக நீ மாறிவிடுவாயானால், அதன் பின், இப்படி பலபேர் உன்னைக் காணும்படி, நீ வெளியே தோன்றக் கூடாது. அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர் அடிக்கு, நெருஞ்சிப் பழம். 1120 மிக மென்மையான அனிச்ச மலரும், அன்னப் பறவையின் மிக மெல்லிய இறகும்கூட, என் காதலியின் பஞ்சுபோன்ற பாதங்களில் நெருஞ்சி முள் போலக் குத்திவிடக் கூடியவை. அவ்வளவு மென்மையானவை என் காதலியின் பாதங்கள்.

233