பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை இன்பம் 113. காதல் சிறப்பு உரைத்தல் (காதலர் இருவரும் அவரவர் காதல் மிகுதியைக் கூறுவது) பாலொடு தேன் கலந்தற்றே-பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்! 1121 இன்பச் சொற்களைப் பேசும் காதலியின் முத்து பற்களினிடையே ஊறி வந்த அவளுடைய வாயமுதம் (வாயிதழில் வெளிவரும் நீரானது) பாலோடு தேன்கலந்து சுவையாக உள்ளது. r

உடம்பொடு உயிரிடை என்ன, மற்று அன்ன. மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122 “உடலுக்கும், உயிருக்கும் எத்தகைய உறவோ அத்தகைய உறவே, அவளுக்கும் எனக்கும் உயிரைவிட்டு உடல் பிரிய முடியுமா?” அதுபோலவே அவளும் நானும் ஒன்றானோம். கருமனியின் பாவாய் ! நீ போதாய் -யாம் விழும் திருதுதற்கு இல்லை, இடம் ! #123 என் கண்ணின் கருமனியில் இருக்கின்ற பாவையே நீ போய் விடு; நீ இருப்பதனால், என் காதலிக்கு அதில் இருக்க இடம் இல்லை. ஆதலால், நீ போய் விடுவாயாக! நீ இருக்கும் இடத்தில் அவளை வைக்க எண்ணுகிறேன்.

வாழ்தல் உயிர்க்கு அன்னள், ஆயிழை; சாதல்

அதற்கு அன்னள், நீங்கும் இடத்து. 1124 சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ள என் காதலி, என்னுடன் கூடி இருக்கும் வரையிலும், உயிர் போல இருக்கிறாள். என்னை விட்டு அவள் பிரிந்து செல்லும் போது, என் உயிர் போவது போல் ஆகிவிடுகிறது.

உள்ளுவன்மன், யான் மறப்பின்; மறப்பு அறியேன், ஒள் அமர்க் கண்னாள் குணம். 1125 என் காதலியின் குணநலன்களை நான் ஒரு பொழுதும் மறப்பது இல்லை. மறந்திருந்தால்தானே நினைக்க வேண்டும்? எனவே, எப்பொழுதும் என் நினைவிலேயே