பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை இன்பம் நனவு என ஒன்று இல்லை.ஆயின், கனவினான் காதலர் நீங்கலர்மன். #216 விழிப்பு வந்து, நான் விழிக்காமலே இருந்திருப்பேனே யானால், என் கனவிலே வந்த என் காதலரும் என்னை விட்டுப் பிரிந்திருக்காமல் இருந்திருப்பார் அல்லவா? கனவைக் கலைப்பதற்கு இந்த விழிப்பு ஏன் வந்ததோ?

நனவினான் நல்காக் கொடியார் கனவினான், என், எம்மைப் பிழிப்பது? 1217 நான் விழித்திருக்கும் போது, ஒரு நாளாவது வந்து, என்னிடம் அன்பைக் காட்டாத கொடியவரான என் காதலர், கனவில் வந்து என்னைத் துன்புறுத்துவது ஏனோ?

துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி, விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர், விரைந்து. 1278 நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது, என் தோளைத் தழுவுவதுபோல் காணப்படும் என் காதலர், நான் விழித்துப் பார்க்கும் போது, விரைவாக என் நெஞ்சுக்குள் புகுந்துள்ளார். நனவினான் நல்காரை நோவர்-கனவினான் காதலர்க் காணாதவர். 219 இந்த ஊரில் உள்ள பெண்கள், தங்கள் காதலரைக் கனவில் கண்டு மகிழாதவர்கள் அதனால், நேரில் வந்து அன்பு செலுத்தாத என் காதலரை, அன்பு இல்லாதவர் என்று அவர்கள் நொந்து கொள்கின்றனர். நனவினான், நம் நீத்தார் என்பர்; கனவினான் காணார்கொல், இவ் ஊரவர் ! 1220 இந்த ஊரில் உள்ள பெண்கள், என் காதலர் நாள் தோறும், என் கனவிலே வந்து இன்பம் அளிப்பதை அறியாதவர்கள். அதனால்தான், அவர் வரவில்லை என்று எண்ணி ஏளனம் செய்கின்றனர்.

254