பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் அதிகாரம் 123 123. பொழுது கண்டு இரங்கல் (மாலை நேரத்தைக் கண்டு காதலி வருத்துவது)

மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை நீ;- வாழி, பொழுது ! 122? மாலைப் பொழுதே! நீ மாலைப் பொழுதாகவா இருக்கிறாய்? மணந்தவர் பிரிவுத் துயரால் வாடும் பேதையரின் உயிரை உண்ணும் முடிவு காலமாக அல்லவா, இருக்கிறாய் வாழ்க!

புன்கண்ணை-வாழி, மருள் மாலை!-எம் கேள்போல் வன்கண்னதோ, தின் துணை? 1222 மயங்குகின்ற மாலைப் பொழுதே! நீயும் துன்பப் படுகின்றாய்; வாழ்க! உன் துணைவனும், என் காதலரைப் போலவே, அன்பு இல்லாதவன் தானா?

பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித் துன்பம் வளர, வரும். 1223 பனி அரும்பி, பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது, எனக்கு வாழ்வில் வெறுப்பு உண்டாக்கி, துன்பம் வளரும் படி வருகின்றது.

காதலர் இல் வழி, மாலை, கொலைக்களத்து ஏதிலர் போல, வரும். #224 இந்த மாலைப் பொழுதானது, என் காதலர் இல்லாத இப்பொழுது, கொலைக் களத்திலே வரும் கொலையாளியைப் போல, என் உயிரைக் கவர்ந்து செல்ல வருகின்றது.

காலைக்குச் செய்த நன்று என்கொல்? எவன்கொல், யான் மாலைக்குச் செய்த பகை? 1225 காலைப் பொழுது, எனக்குத் துன்பம் செய்யவில்லை; மாலைப் பொழுது துன்பம் செய்கின்றது. காலைப் பொழுதுக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமை என்ன?

255