பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் அதிகாரம் 127

புலப்பேன்கொல்-புல்லுவேன் கொல்லோ

கலப்பேன்கொல்கண் அன்ன கேளிர் வரின்? #267

என் கண்ணுக்கு இனிய காதலர் வந்தால், பிணங்குவேனா? தழுவிக்கொள்வேனா? இந்த இரண்டையுமே செய்வேனா? என்னதான் செய்யப் போகிறேன்?

வினை கலந்து வென்றிக, வேந்தன்! மனை கலந்து மாலை அயர்கம், விருந்து ! 1263 மன்னன் இந்தப் ப்ோரில் வெற்றிவாகை சூடுவானாக! நானும் அவரோடு திரும்பச் சென்று, காதலியைக்கூடி மாலைப் பொழுதுக்கு விருந்து வைப்போம்.

ஒருநாள் எழு நாள்போல் செல்லும்-சேண் சென்றார் வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு. f269 தனியே தவிக்க விட்டு, தொலை தூரம் சென்ற காதலரை நினைத்து, ஏங்கிக் கொண்டிருக்கும் காதல் மகளிருக்கு, ஒருநாள் என்பது ஏழு நாள்களைப் போல் நீள்கிறது.

பெறின் என் ஆம்-பெற்றக்கால் என் ஆம்-உறின் என்

ஆம்உள்ளம் உடைந்து உக்கக்கால்? 1270 பிரிவை நினைத்து, காதலி வேதனையால், மனம் உடைந்து விட்டால் அதன்பின், நம்மைப் பெறுவதால் தான் என்ன? பெற்றால் தான் என்ன? பெற்றுத் தழுவினாலும் என்ன பயன்?

265