பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை இன்பம்

123. குறிப்பு அறிவுறுத்தல் (குறிப்பினால் அறிந்து, உணர்ச்சியைக்

------

கூறுவது) கரப்பினும், கையிகந்து ஒல்லா, நின் உண்கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு. 1271

நீ சொல்லாமல் மறைத்தாலும், உன்னையும் மீறி, மைதீட்டிய உன் கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது. கண் நிறைந்த காரிகை, காம்பு ஏர் தோள், பேதைக்குப் பெண் நிறைந்த நீர்மை பெரிது. 1272 கண் நிறைந்த கட்டழகும், மூங்கில் போன்ற அழகான தோள்களை யும் உடைய காதலிக்குப் பெண் தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு, மிகுதியாக உள்ளது. மணியுள் திகழ்தரும் நூல்போல், மடந்தை அணியுள் திகழ்வது ஒன்று உண்டு. 1273 மணிச்சரத்தின் உள்ளே காணப்படுகின்ற நூலைப் போல, காதலியின் அழகுக்குள்ளும் அழகாக இழைவது ஒன்று உள்ளது.

முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல், பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு. 1274 இதழ் விரித்து அரும்பு மலரும்போது, அதன் உள்ளே அடங்கியிருக்கும் மணம்போல, காதலியின் புன்சிரிப்பிலும் ஒரு கருத்து அடங்கி உள்ளது. செறிதொடி செய்து இறந்த கள்ளம், உறு துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து. 1275 காதலி, மறைவாகச் செய்துவிட்டுச் சென்ற கள்ளக் குறிப்பில், என் துன்பத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது.

266