பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை அறம்

21. தீவினை அச்சம்

(தீமையான செயலுக்குப் பயப்படுதல்)

தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு. 201 தீய செயல் செய்யக் கூடிய பாவிகள் அதற்கு அஞ்சமாட்டார். ஆனால், தீய செயல் இல்லாத மேன்மையாளர் அதைச் செய்ய அஞ்சுவார். தீயவை தீய பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும். 202 தீய செயல்கள் தீமையை உண்டாக்கக் கூடியவை ஆதலால், தீய செயல்கள் நெருப்பைவிடக் கொடுமையானது என்று கருதிப் பயப்பட வேண்டும். 2O2

அறிவினுள் எல்லாம் தலை என்ப-திய செறுவார்க்கும் செய்யா விடல். 203 தம்மைத் துன்புறுத்துவோருக்குத் தீமை செய்யாமல் இருப்பதே, எல்லாவற்றுக்கும் மேலான அறிவு என்று கூறுவர்.

மறந்தும் பிறன் கேடு சூழற்க! சூழின், அறம் சூழும், சூழ்ந்தவன் கேடு. 204 மறந்தும்கூட மற்றவருக்குக் கேடு உண்டாக்க நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அவருக்குத் துன்பம் ஏற்படக் கூடிய தொல்லை வந்தே தீரும். ‘இலன்’ என்று தீயவை செய்யற்க! செய்யின், இலன் ஆகும், மற்றும் பெயர்த்து. 205 வறுமைக் காரணமாகத் தீய செயல் எதையும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் மேலும் வறுமை ஏற்பட்டுத் துன்புற நேரிடும்.

48