பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் அதிகாரம் 21

தீப் பல தான் பிறர்கண் செய்யற்க-நோய்ப் பால தன்னை அடல் வேண்டாதான் ! 206 துன்பம் தரக்கூடிய தொல்லைகள் தனக்கு வரக்கூடாது என்று நினைப்பவன், பிறருக்குத் தீங்கைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை

வீயாது, பின் சென்று, அடும். 207 எத்தகைய கொடிய பகைவரிடத்திலிருந்தும் தப்பிவிட முடியும். ஆனால், தீய செயல்கள் செய்வதால் வரும் பகை எங்கே சென்றாலும் விடாமல் பின்தொடரும்.

தியவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயது அடி உறைந்தற்று. 208 ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் தொடர்ந்து, அவன் காலடியில் தங்கி இருப்பதைப் போல், தீய செயல் புரிந்தவனைத் துன்பம் விடாமல் தொடர்ந்து வரும்.

தன்னைத் தான் காதலன்.ஆயின், எனைத்து ஒன்றும் துன்னற்க, தீவினைப் பால் ! 209 தன்னுடைய நல்வாழ்வை விரும்பக் கூடியவன், மிகச் சிறிய தீய செயலைக்கூடச் செய்யாமல் வாழ வேண்டும்.

அருங் கேடன் என்பது அறிக-மருங்கு ஒடித் தீவினை செய்யான் எனின் ! 210 தீயவழியில் சென்று தீய செயல் செய்யாமல் இருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறிந்து கொள்ளலாம்.