பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் அதிகாரம் 28

நெஞ்சின் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து, வாழ்வாரின் வன்கணர் இல், 276 மனத்தில் இருக்கும் ஆசைகளை விடாமல், துறவியைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப் போல் கொடியவர் யாரும் இல்லை.

புறம் குன்றி கண்டனையரேனும், அகம் குன்றி முக்கின் கரியார் உடைத்து. 277 குன்றிமணி சிவந்து மினுமினுப்பாக காணப்பட்டாலும், அதன் மூக்கில் உள்ள கருப்பைப் போல், உள்ளத்தால் தீயவர்களும் உலகில் உள்ளனர்.

மனத்தது மாசு ஆக, மாண்டார் நீர் ஆடி,

மறைந்து ஒழுகும் மாந்தர் பலர். 278 மனத்தில் குற்றம் இருக்க, தவத்தில் சிறப்புடையவர் போல் பிறருக்குத் தெரியும்படி நீரில் மூழ்கி மறைந்து செல்லும் வஞ்சனை உடைய மனிதர் பலர் உள்ளனர்.

கணை கொடியது; யாழ் கோடு செவ்விது; ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல். 279 வடிவத்தால் அம்பு நேராக இருந்தாலும் அது கொடியது. யாழின் தண்டு வளைவாக இருந்தாலும், அது நன்மையானது அவைபோல, தவம் செய்வோரையும் வேடத்தால் ஏற்காமல், செயலால் அறிந்து கொள்ள வேண்டும்.

மழித்தலும் நீட்டாலும் வேண்டா - உலகம் பழித்தது ஒழித்துவிடின். 280 உலகம் பழித்துக் கூறும் தீய செயலை விட்டுவிட்டால், தவம் செய்கின்றவர் மொட்டை அடித்துக் கொள்ளவோ, சடை வளர்த்துக் கொள்ளவோ வேண்டாம்.

63