பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை அறம்

29. கள்ளாமை

(பிறர் பொருளைக் களவாடாமல் இருப்பது) எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க, தன் நெஞ்சு !. 281 இகழப்படாமல் இருக்க விரும்புகின்றவன், எந்தப் பொருளையும் களவு செய்ய எண்ணாமல், தன்னுடைய மனத்தைக் காக்க வேண்டும். உள்ளத்தால் உள்ளலும் தீதே, பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம்’ எனல் ! 282 மனத்தால், குற்றத்தை நினைப்பதும் தீமையே; ஆதலால், பிறருடைய பொருளை அவர் அறியாதபடி, வஞ்சனையால் களவாடுவோம் என்று நினைக்காமல் இருக்க வேண்டும். கள்வினால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து, ஆவது போல, கெடும். 283 களவாடிப் பெற்ற செல்வம் அளவுக்கு அதிகமாகப் பெருகுவதுபோல் தோன்றிப் பின்னர், உதவாது அழிந்துவிடும். களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். 284 களவாடுவதில் ஆசை வளர்ந்து விட்டால், அதன் பயனாகத் துன்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அருள் கருதி அன்புடையர் அதல் பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285 ஏமாந்து இருக்கும் சமயம் பார்த்து, ஒருவருடைய பொருளைக் களவாட நினைப்பது, கருணையைப் பெரிதாகக் கருதி, அன்பு வழியில் நடப்பவரிடம் இருக்காது

64