பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் அதிகாரம் 29

அளவின்கண் நின்று ஒழுகலாற்றார் - களவின்கண் கன்றிய காதலவர். 286 பிறருடைய பொருளைத் திருடி வாழ ஆசை மிகுந்தவர், வாழ்வின் ( சிக்கனமான) அளவுக்கு ஏற்ற முறையில் வாழ மாட்டார்.

களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல். 287 தம்முடைய தகுதிக்கு ஏற்றபடி, அளவோடு வாழ்க்கை நடக்கக் கூடிய மன உறுதி உள்ளவரிடத்தில் அறிவு மயங்கிய திருட்டு எண்ணம் இருக்காது.

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல, நிற்கும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு. அளவு அறிந்து வாழ்கின்றவர் மனத்தில், நல்ல எண்ணம் நிலைத்திருப்பதுபோல், திருட்டு எண்ணம் கொண்டவர் மனத்தில் வஞ்சகம் குடிகொண்டு இருக்கும்.

அளவு அல்ல செய்து, ஆங்கே வீவர் - களவு அல்ல மற்றைய தேற்றாதவர். 289 திருடுவதைத் தவிர, வேறு நல்ல வழிகளை அறியாதவர், அளவற்ற தீமைகளைச் செய்து, அப்பொழுதே கெட்டு அழிவார்.

கள்வார்க்குத் தள்ளும், உயிர்நிலை, கள்ளார்க்குத் தள்ளாது, புத்தேள் உலகு. 290 திருடிப் பிழைப்பவருக்கு, உயிர் வாழ்வதனால் பலன் கிடைக்காது, திருட்டு எண்ணம் இல்லாமல் வாழ்கின்றவருக்கு உலகப் புகழ் கிடைக்கும்.

85