பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் அதிகாரம் 33

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது, உயிர் உண்ணும் கூற்று. 326 கொல்லாமல் இருக்கும் கடமையைக் கொண்டு நடப்பவனின் வாழ்நாளின் மீது, உயிரைக் கொண்டு செல்லும் எமனும் செல்ல மாட்டான்.

தன் உயிர் நீப்பினும் செய்யற்க - தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை ! 327 தன்னுடைய உயிர் உடம்பைவிட்டு நீங்குவதானாலும், தான் வேறு ஒன்றின் இனிய உயிரைக் கொல்லும் செயலைச் செய்யக் கூடாது.

நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும், சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை. 328 கொலை புரிவதால் வரும் செல்வம், மிகப் பெரிதாக இருந்தாலும், அப்படி வருகின்ற நன்மை சான்றோருக்கு இழிவானது.

கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர், புன்மை தெரிவார் அகத்து. 329 கொலைத் தொழில் புரிகின்ற மனிதர்களை, அதன் சிறுமை அறிந்தவர்கள், இழிந்த தொழில் செய்கின்றவர் களாகவே எண்ணுவர்.

‘உயிர் உடம்பின் நீக்கியார்’ என்ப - செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர்.’ 330 நோயுடன் கூடிய உடம்புடன் வறுமை உள்ள கொடிய வாழ்க்கை உடையவர், முன்பு பல கொலைகள் செய்து, உயிர்களை உடம்பிலிருந்து நீக்கியவர் என்று கூறுவார்.

73