பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை அறம்

34. நிலையாமை (உடம்பும் செல்வமும் நிலையில்லாதவை)

நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை கடை. 331 நிலையில்லாதவைகளை, நிரந்தரமானவை என்று நினைக்கின்ற அற்ப புத்தி உள்ளவராக இருப்பது மிகவும் இழிவாகும்.

கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே, பெருஞ் செல்வம்; போக்கும், அது விளிந்தற்று. 332 அரங்குகளில் கூத்து நடைபெறும் போது கூட்டம் கூடுகிறது; கூத்து முடிந்த உடன், கலைந்து சென்று விடுவதைப் போல், பெரிய செல்வமும் வருவது போலவே வந்து போய் விடும். (வள்ளுவர் காலத்தில் நாடகம், நாட்டியம், சினிமா இல்லை)

அற்கா இயல்பிற்றுத் செல்வம்; அது பெற்றால், அற்குப ஆங்கே செயல் ! 333 செல்வம் எந்த இடத்திலும் நிலைத்து இருக்காத இயல்பு உடையது; அப்படிப்பட்ட செல்வத்தைப் பெற்றால், அப்பொழுதே நல்ல காரியங்களைச் செய்து விட வேண்டும். நாள் என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும் வாளது - உணர்வார்ப் பெறின். 334 நாள் என்பது, ஒரு கால அளவு போல் காட்டி அடுத்தடுத்துப் பல நாட்களாக வந்து, சிறுகச் சிறுக, உயிரை அறுத்துவிடுகின்ற வாள் என்பதை உணர வேண்டும் (ஒவ்வொரு நாளாக வாழ்நாள் கழிகிறது).

நாச் செற்று, விக்குள் மேல்வாராமுன், நல் வினை மேற்சென்று செய்யப்படும். 335 பேச முடியாமல் நாக்குக் குழறி விக்கல் எழுந்து, உடலை விட்டு உயிர் போவதற்கு முன், விரைவாக, நல்ல காரியங்களைச் செய்து விட வேண்டும்.

74