பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கயமை

உடுப்பதூஉம் உண்பது உம் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ்

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது கயமை என்ற அதிகாரத்தின் கீழ் வந்த ஒன்று.

பிற மொழிகளால் மொழி பெயர்க்க முடியாத தமிழ்ச் சொற்கள் பல. அவற்றுள் மகளின் இயல்பைக் குறிப்பிடும் சொற்கள் சில. அவற்றுள் ஒன்று ‘சான்றாண்மை’ என்று முன் கூறினோம்: மற்றொன்று ‘கயமை’.

‘சான்றாண்மை’ என்பது உயர்ந்த தன்மையின் முடிவான எல்லையையும், ‘கயமை’ என்பது இழிந்த தன்மையின் கடையான எல்லையையும் காட்டும். இதனைத் தமிழ் மக்கள் கண்ட அளவிற்குப் பிற மக்கள் காணவில்லை. தமிழ் கண்ட அளவிற்குப் பிற மொழிகள் காணவில்லை. அதனால் இவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலை அவை இழந்து நிற்கின்றன. இது தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு உள்ள ஒரு தனிச் சிறப்பாகும்.

இழிந்த குணத்திலும் ஓர் இழிந்த தன்மையையே வள்ளுவர் ‘கயமை’ என்று கூறுகிறார். கயமைக் குணம் உடைய மக்களையே அவர் கயவர் எனக் குறிப்பிடுகிறார். சயவர் யார்? என்பதை இக் குறள் காட்டுகிறது, காணுங்கள்.

கீழ் என்பது இரண்டே எழுத்துள்ள ஒரு சொல்! அஃது இக் குறளின் இறுதியிலிருந்து ஒரு தனியாட்சி செய்து கொண்டிருக்கிறது. இதன் வெளிப்படையான

தி-2