பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

திருக்குறள் கட்டுரைகள்


பொருள் கீழானவன், தாழ்ந்தவன், இழிந்தவன் கயவன் என்பன. இச் சொற்களால் கூறினாற் கயவனை ‘மனிதன்’ என ஒப்புக்கொண்டதாக ஆகிவிடுமாம். ஆகவே, அவ்வாறு கூற விரும்பாமல், வள்ளுவர் அதனைக் கீழ் என்று அஃறிணைப் படுத்தியே கூறிவிட்டார். பாவம்! இஃது இரங்கத்தக்க ஒன்றாகும்.

கயவனைக் ‘கீழ்’ என்றது இக்குறளில் மட்டுமன்று. இதனொடு தொடர்புடைய மற்றிரு குறள்களிலும் “கீழ்” வருகிறது. ஒரு கீழ், குறைந்த தீமை விளைவிக்கும் மக்களைக் கண்டதுமே அவர்களைவிடத் தீமை விளைவிப்பதில், ‘தான் உயர்ந்தது’ என எண்ணி இறுமாப்புக் கொள்ளுமாம். மற்றொரு கீழ் தன்னிடம் வந்து அழுது கெஞ்சி, உதவி கோரும் எவர்க்கும் எதுவும் கொடாமல் அடித்து உதைக்கவரும் முரடர்கட்கு நிறையக் கொடுத்து உதவுமாம். ஆனால் இக் குறளில் உள்ள கீழோ, பிறர் வாழ்வதைக் கண்டதுமே மனம் பொறுக்காமல் துடிக்குமாம். எப்படி இக்கீழின் இழிநிலை?

கயவனைக் “கீழ்” என்று ஒருமையில் மட்டும் குறிப்பிடவில்லை. பன்மையிலும் அவர்களைக் “கீழ்கள்” என்று மற்றொரு குறளிற் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கீழ்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து வாழும் என நம்ப வேண்டியிருக்கிறது. இதுகளிடத்தில் ஒழுக்கம் என்பது அடியோடு இராது. எப்போதாவது சிறிது காணப்பெற்றால் அது அடி விழும் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தினாலோ பொருள் முதலிய எதுவும் கிடைக்கும் என்ற ஆசையினாலோ இருக்குமேயன்றி அதன் இயல்பாக இராது” என்று கீழ்களுக்கு கூறும் இலக்கணமே ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. .

ஏறக்குறைய 4300 சொற்களுள்ள குறளில் கீழ் என்ற சொல் 10இடங்களில் மட்டுமே வருகிறது. அவற்றில் இழி குணம் என்ற பொருளில் வந்த சொற்கள் நான்கே. இந்த