பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கயமை

19


நான்கிலும் எந்த ஒன்றையும் மக்களின் வேறு எந்தக் குணத்திற்கும் வழங்காமல், கயமைக் குணத்திற்கே வள்ளுவர் வழங்கிவிட்டது எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.

கயவர் வேறு, தீயவர் வேறு என்பது வள்ளுவர் கருத்து. தீயோர்கள், நல்லதோ கெட்டதோ ஒன்றைச் செய்யும் ஆற்றுல் படைத்தவர். கயவர்கட்கு அந்த ஆற்றலும் இராது. தீமையைச் செய்ய எண்ணுவார்கள். சொல்வார்கள். அவ்வளவுதான். அவர்களால் எதுவுஞ் செய்ய இயலாது. இவ்வுண்மையை “எற்றிற்கு உரியர் கயவர்?” என்பதனால் நன்கறியலாம். இதனால் இக் கீழ்களைத் “தீயோர்க்கும் கீழ்” என்று கூறியதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

எதற்கும் உதவாத இக்கீழினிடத்தில் ஒரு வலிமை மட்டுங் காணப்படுமாம். இதனை “வற்றாகும் கீழ்” என்ற சொற்கள் அறிவிக்கின்றன. வற்று-வலிமை! என்ன வலிமை? ஒருவர்மீது மற்றவரிடம் குறைகூறி, அதை அவர் நம்பும்படி செய்துவிடுவது. எப்படி இக்கீழின் வலிமை?

ஒருவர்மீது குறை கூறுவதற்கு அவர்கள் உண்மையாகவே தவறு செய்திருக்கவேண்டும் என்பதில்லை. ஏனெனில், பழிபாவங்களுக்கு அஞ்சி நடக்கவேண்டுமே என்ற கவலை எப்போதும் கீழுக்கு இராது. ஆகவே, அக்கீழ் ‘இல்லாத குறையைக்கூடக் கற்பனை செய்து கூறி, எவரையும் நம்பவைத்துவிடும்’ என்பது வள்ளுவர் கருத்து. இதனை இக்குறளிலுள்ள ‘வடு, காண’ என்ற இரு சொற்களும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

கயமை வேறு, பொறாமை வேறு. பொறாமைக்காரர்களுக்கு மற்றவர் எவரும் வண்டி, வாகனம், நீர், நிலம், பொன், பொருள் முதலியவைகளை வைத்து வாழ்வது பிடிக்காது. ஒன்றுமில்லாவிட்டாலும் பெருமூச்சு விட்டுப் பொறாமை அடைவதற்குப் பட்டாடையும், பாலுணவு