பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருக்குறள் கதைகள் ஒழுக்கம், உழைப்பு, விசுவாசம், கடமை உணர்ச்சி முதலிய அரிய நற்பண்புகளுக்கெல்லாம் உறைவிடமாக விளங் கியவன். அவனுடைய ஒரே மகன்தான் நாராயணசாமி. எனக்கென்னவோ இவனை வேலையிவிருந்து விலக்குவது அவ் வளவு நியாயமாகப் படவில்லை. காலமெல்லாம் இந்த மில்லுக்காகவே உழைத்துப் பாடுபட்ட பாண்டுரங்கத்தின் குடும்பத்துக்கு நாம் செய்யும் பிரதி உபகாரம் இதுதான ?’’ முதலாளியின் குரலில் விவரிக்க இயலாத வருத்தமும் வேதனையும் வெளிப்பட்டன. " தாங்கள் சொல்வது உண்மைதான். ஆயினும் நாராயணசாமியை வேலைக்கு வைத்துக்கொண்டால் அதனல் பல இடையூறுகள் ஏற்படுமே ! அவனுக்கு முன்பாகவே வேலையில் சேர்ந்தவர்களை யெல்லாம் நீக்கிவிட்டு, அவனை மட்டும் வேலைக்கு வைத்துக் கொள்வது சரியாகாதே ? . என்ருர் மானேஜர். மானேஜர் வாதம் நியாயமாகப் பட்டது சாரங்க பாணிக்கு. அப்படியானுல் அவனை வேலையிலிருந்து நீக்கி விட வேண்டியதுதான ? வேறு வழியே. இல்லையா ? நாராயண சாமிக்குப் பிறகு வேலைக்கு வந்தவர்களை மட்டும் நீக்கி விட்டால் என்ன?' என்று கேட்டார் அவர். ' அவனுக் குப் பிறகு முப்பது பேர்களைத்தானே வேலைக்குச் சேர்த்திருக்கிருேம் ' என்ருர் மானேஜர். - முதலாளியின் நெற்றியில் சுருக்கங்கள் அலைந்தன. சரி : இந்த நூற்று முப்பது பேருக்கும் நோட்டீஸ் கொடுத்து விடுங்கள். நேர்ட்டீஸ் போர்டிலும் ஆள் குறைப்பு பற்றி விவரமாக அறிக்கை ஒன்றைத் தயார் செய்து ஒட்டி விடுங்கள் ' என்ருர் சாரங்கபாணி அரை மனத்துடன். அடுத்த சில நிமிடங்களில் காரியாலயத்தில் இருந்த டைப் ரைட்டர்கள் அத்தனையும் நெல் பொரிவதைப் போல "பட் பட பட் டென்று எழுத்துக்களைப் பொறித்துக்கொண் டிருந்தன.