பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருக்குறள் கதைகள் பாங்க. பால் டின்னுங்களைச் சீல் வெச்சுதான் கொடுப்போம். சம்மதம்னு புதன்கிழமை வந்து பார்க்கச் சொல்லு. ஆமாம்; யாரு அந்த நாராயணசாமி ?’ என்று விசாரித்தார் கன்னியப்பன். - கண்ணம்மாள் நாணத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டே, எனக்குத் தெரிஞ்சவரு. மில்விலே வேலை செஞ்சிக்கிட்டிருந்தாரு. இப்ப வேலை போயிடுச்சு என்ருள். கன்னியப்பன் விஷயத்தைப் புரிந்துகொண்டார். சரி, புதன்கிழமை காலம்பர ஒன்பது மணிக்குள்ளற வந்து என்னைப் பார்க்கச் சொல்லு என்று கூறி அனுப்பினர். கண்ணம்மா சாப்பாடு கொண்டு வரும் முருகேசனிடம் பால் பண்ணை வேலையைப்பற்றி நாராயணசாமிக்குத் தகவல் அனுப்பி யிருந்தாள். முருகேசன்மூலம் அந்தத் தகவலே அறிந்ததும் நாராயணசாமி பால் பண்ணைக்குப் போய்க்கொண்டிருந்: தான். - சங்கு பிடிக்கும் நேரம் ஆயிற்றே, ஒரு வேளை கண் ணம்மா எதிரில் வருவாளோ? அல்லது இதற்குள் மில்லுக் குப் போய் விட்டிருப்பாளோ?' என்ற எண்ணத்துடனேயே சைக்கிள் பெடலே உதைத்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்தபடியே கண்ணம்மா சற்றுத் தொலை வில் வந்துகொண்டிருந்தாள். சைக்கிளே நிறுத்தி அவளுடன் பேசுவதா அல்லது பிகு” வாகப் பேசாமலே போய்விடுவதா என்ற அவசரப் பிரச்னை ஒன்று தோன்றிவிட்டது அவனுக்கு. இதற்குள் கண்ணம்மா அவன் சமீபமாக நெருங்கி வந்துவிட்டாள். நாராயண்சாமியைப்பற்றி அவள் இதயத்தில் மூன்று விதமான உணர்ச்சிகள் கதம்பமாய்க் கலந்துகிடந்தன. ஒன்று அன்பு. - மற்ருென்று கோபம். இன்னென்று அதுதாபம்.