பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருக்குறள் கதைகள் 7

  • அம்மா, நாளையிலிருந்து நான் பால் விக்கப் போறேன்' என்று கூறிக்கொண்டே வந்த நாராயணசாமி சைக்கிளைத் தாழ்வாரத்தில் கொண்டுபோய் நிறுத்தினன்.
  • பால் விபாபாரமா ? அது பாவமான தொழிலாச்சே! இலாபம் வேணும்ன தண்ணி கலந்தாத்தான் முடியும். அப்படி மோசம் செய்து பிழைக்கிற பால் வியாபாரம் நமக்கு வேளும் என்ருள் நாராயணசாமியின் தாய்.
  • நான் விக்கப்போறது சீல் வெச்ச பாலம்மா ; பால் டிப்போவிலேயே பாத்திரத்தை மூடி, சீல் வெச்சுக் கொடுத்துவிடுவாங்க. இலாபம் நம்மைச் சேர்ந்தது. பாவம் பால் டிப்போவைச் சேர்ந்தது. அதிருஷ்டம் இருந்தா மாசம் அம்பது ருபாகூடக் கிடைக்கும். அம்மா, டிப்போவிலே தயிர்கூடக் கொடுக்கிருங்க. நீ அதை வாங்கி விற்கலாம் ' என்ருன் நாராயணசாமி.
  • தயிரா? அப்படின்ன நீ பால் வாங்கும்போதே அதை யும் வாங்கிக்கிட்டு வந்துடு. நான் நாலு இடங்களில் வாடிக்கை பிடிச்சு வித்துட்டு வரேன். மானத்தோடு வாழனும். எந்த வேலை செய்தா என்ன?’ என்ருள் அவன் தாயார். . . "

அண்ணு! எனக்குத் தையல் வேலை தெரியும். நானும் சும்மா இல்லாமல் தையல் வேலை செய்யப் போறேன். நாம் மூணு பேருமே பாடுபட்டு உழ்ைச்சா கடவுள் நமக்குப் படி அளக்காமலா போயிடுவாரு ' என்ருள் பாப்பா. தினமும் எட்டு மைல் தூரம் சைக்கிளில் ப்ோய், பண்ணை யிலிருந்து பாலும் தயிரும் கொண்டு வந்தான் நாராயண சாமி. காலையிலும் மாலையிலும் அலைந்து திரிந்து உழைத் தான். - - - - அவன் தாயாரும் தயிர் வியாபாரம் செய்து வந்தாள். பாப்பர் வீட்டோடு தையல் வேலை செய்து வந்தாள். - சாரங்கபாணி தம் பங்களாவிலிருந்தபடியே பாண்டு ரங்கத்தின் மனைவி மக்கள் படும் துன்பங்களைக் கண்டு மனம்