பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரோவியம் 7 என்ன விந்தை 1 அன்னையின் உள்ளத்தில் மறைந்து கிடந்த அந்த இனம் தெரியாத சோகம் அவனுடைய சித்திரத்தில் அப்படியே பிரதிபலித்தது. அவன் நீண்ட காலமாக எழுத வேண்டும், எழுதவேண்டும்’ என்று காலம் கடத்திக்கொண் டிருந்த அந்தச் சித்திரம் முழு வெற்றியுடன் அமைந்து விட்டது. அந்தப் படத்துக்குக் கீழே தன் கையெழுத்தைப் போட்டான். படத்தின் விலை இருபத்தையாயிரம் என்றும் எழுதி, அதன் கீழ் ஒட்டிச் சித்திரக் காட்சிச் சாலைக்கு அனுப்பிவிட்டான். - - - சித்திரக் காட்சிக்கு விஜயம் செய்த சமஸ்தான மன்னர் ஒருவர் அதை இருபத்தையாயிரம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், சித்திரத்தைக் கண்காட்சி முடிந்ததும் எடுத்துக் கொள்வதர்கவும் கூறிவிட்டுப் போயிருந்தார். ஆயினும் கலைஞன் ராஜூவின் உள்ளத்தை ஏதோ ஒன்று அரித்துக்கொண்டிருந்தது. தாயின் சோக வடிவத்தை எல்லோரும் வியக்கத்தக்க முறையில் எழுதி அதனால் பெரும் கீர்த்தி பெற்றுவிட்டேன். ஆனல் இதுதான என்னுடைய லட்சியம்: ஒரு சித்திரத்தின் பயன் இதுதான ? சித்திரத் தின் வெற்றிக்கு மூலகாரணமான என் தாயின் துன்பத்தைக் கண்டுபிடித்து அதைத் துடைக்கும் சக்தி எனக்கு இல்லையே..!" இந்தச் சமயத்தில் யாரோ அறைக் கதவைத் தட்டும் ஒசை கேட்டது. - - யார் அது.? " நான்தான் தமயந்தி. இன்று சித்திரக் கண்காட்சிச் சாலைக்குப் போயிருந்தேன். அவ்வளவு பேரும் தங்கள் சித்தி ரத்தைச் சூழ்ந்துகொண்டு நிற்கிரு.ர்கள். தங்களுக்குத்தான் முதல் பரிசு என்றும் அறிவித்துவிட்டார்கள் ' என்று பெரு மிதத்துடள் கூறினள். - ராஜு ஆழ்ந்த சிந்தண்யில் லயித்திருந்தான். * ஐயா, இன்று மால் என் வீட்டில் தங்களுக்கொரு சிறு விருந்து நடத்தப் போகிறேன்' என்ருள் தமயந்தி. ஏன்? என்ன விசேஷம் ?