பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருக்குறள் கதைகள் இன்று எனக்குப் பிறந்த தினம். தாங்கள் தடை சொல்லாமல் விருந்துக்கு வரவேண்டும்.' ஆகட்டும்.' அன்றுதான் ராஜு, தமயந்தியின் இல்லத்துக்கு முதல் முறையாகச் சென்ருன். அந்த வீட்டில் தமயந்தியும் அவள் மூத்த சகோதரி லலிதாவும் மட்டுமே இருந்தனர். லலிதா "ஒரு மாதிரி"யாக வாழ்க்கை நடத்துபவள் என்பதைப்பற்றி அவன் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தான். ஆனலும் அதைப்பற்றி யெல்லாம் அவனுக்கு என்ன அக்கறை? தமயந்தி அலனுக்குப் பணம் கொடுக்கிருள். அவன் சித்திரம் கற்றுக்கொடுக்கிருன்...அவ்வளவுதான். i விருந்துக்குப் பிறகு தமயந்தி ராஜாவை ஒரு ஹாலுக்கு அழைத்துச் சென்ருள். அங்கேயிருந்த அபூர்வமான தந்தப் பொருள்களையும், சித்திரங்களையும், சிலைகளையும் அவனுக் குக் காட்டினள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்த ராஜூ ஹாலுக்கு மத்தியில் சுவரில் மாட்டப் பட்டிருந்த ஒரு படத்தைக் கண்டதும் அசைவற்று நின்றன். காரணம், அது ராஜூவின் தந்தை மாசிலாமணியின் படம் : "'என்ன? அப்பாவின் படமா? அவர் படம் இங்கு எப்படி வந்தது ? ஒகோ : ஒரே கணத்தில் அவனுக்கு எல்லாம் விளங்கி விட்டன. 'அம்மா கூறினள்ே, அடிக்கடி பட்டணம் போகிருர் என்று, இதற்குத்தான ? அம்மா ! உங்கள் முகத் திலே உள்ள சோகக் களங்கத்துக்குக் காரணம் இதோ நிதர் சனமாக விளங்கிவிட்டது. இந்த ரகசியத்தைத்தானே எள்ளிைடம் சொல்லாமல் மூடி மறைத்தீர்கள் ? இதோ தெரிந்துவிட்டது அம்மா அந்த உண்மை !' - ராஜு, அப்புறம் அந்த வீட்டில் அதிக நேரம் தாமதிக்க வில்லை. சீக்கிரமே புறப்பட்டுவிட்டான், புறப்பட்டவன் நேராகக் காட்சிச் சாலைக்குச் சென்ருன். அங்கிருந்த தன் தாயின் படத்தைக் கையில் எடுத்துக்கொண்டான். காட்சிச் சாலை அதிகாரியிடம் சென்று, ! ஐயா, இந்தச் சித்திரக் காட்கியில் என் படத்தை வைத்கிருக்க இய