பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் - 91 ஆணும்' என்று விநயமாக முதலாளியைப் பார்த்துக் கேட்டுக் கொண்டான் நாராயணசாமி. இ ல் லை நாராயணசாமி ! தொழிலாளருக்காக ஏற்பட்ட கடை இது. ஆகவே நம் மில்லிலே ரொம்ப நாளா வேலை செய்கிற வேலுச்சாமிப் பெரியவரை ஆரம்பித்து வைக்கச் சொல்றதுதான் நியாயம் ' என்ருர் முதலாளி. வேலுச்சாமிக் கிழவரை அழைத்துப் பெரியவரே, நீங்க தான் கைராசிக்காரர். உங்க கையாலேயே போனி: செய்து ஸ்டோரை ஆரம்பிச்சு வையுங்க” என்று கேட்டுக் கொண்டார் சாரங்கபாணி. வேலுச்சாமி மிக்க மசிழ்ச்சியுடன் தம் கையால் கற்கண்டை விலக்கு வாங்கி முதல் முதலாக வியாபாரத் தைத் தொடங்கி வைத்தார். தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகத்தோடு கைதட்டி ஆரவாரம் செய்தனர் ! マ - பின்னர் சாரங்கபாணி அந்த ஸ்டோரை ஆரம்பித்ததன் நோக்கத்தை விளக்கிச் சில வார்த்தைகள் பேசினர் : - நம் மில் தொழிலாளர்களின் செளகரியத்தையும் நன்மையையும் முன்னிட்டு இன்று இந்த ஸ்டோர் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு வேண்டிய எல்லாவித மான பொருள்களும் குறைந்த விலையில் கிடைக்கும். நாரா. யணசாமி நம் எல்லாருடைய நம்பிக்கைக்கும் பாத்திர மானவன். அவனுடைய ச வியாத உழைப்பாலும் முயற்சியாலும் இந்த ஸ்டோர் வெகு சீக்கிரமே மிகப் பெரிய அளவில் வளர்ந்துவிடும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இந்த முயற்சிக்கு உங்கள் எல்லாருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்று கேட்டுக் கொள் கிறேன்." . பாண்டுரங்கத்தின் குடும்பத்துக்குத் தாம் செய்ய வேண் டியதைச் செய்து விட்டோம் என்ற மனத் திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்ருர் சாரங்கபாணி. வீட்டை அடைந்ததும் அவருக்கு மார்வலி கண்டுவிட்டது. அப்படியே படுக்கையில் போய்ப்படுத்துக்கொண்டவர்தான்.டிரைவரை.