பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
125


மறம், மானம், சிறந்த வழிகளில் இயங்குதல், தெளிவு பெறுதல் இந் நான்கும் கொண்டது படையின் தன்மை.

எதிரியின் தூசிப்படை (முன்னணிப்படை) மிக்க வலிமை உடையது; ஆயினும் அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் நாட்டில் படைவீரர்களுக்கு இருத்தல் வேண்டும். அலைகள் வரும்போது தடுத்து நிறுத்துவதே அணைகள் கட்டியதன் பயனாகும்.

அடுகின்ற ஆற்றலும், மற்றவர்கள் விடுகின்ற படையைத் தாங்கும் வலிவும் இல்லாவிட்டாலும் வீரர்களின் தோற்றம் ஏற்றம் உடையதாக இருக்க வேண்டும். ஆளைக் கண்டே பகைவர் நடுங்க வேண்டும்.

அரசனுக்கு உரிய படை அளவில் சிறிதாக இருத்தல் கூடாது. வீரர்களுக்கு அரசனிடம் தொடர்ந்த வெறுப்பும், தமக்குப் பற்றாக்குறையும் இருத்தல் கூடாது; இவை நீங்கிய மனநிறைவு உடைய படையே வெற்றி கொள்ளும்.

படைமாட்சி உடையதாயினும் அதனை இயக்கும் படைத் தலைவன் தக்கவனாக அமைய வேண்டும்; தலைமையும் சிறப்பாக இருக்க வேண்டும்.

78. படைச்செருக்கு

வீரர்கள் செருக்கு மிக்கவராக விளங்கினர்; எந்தச் செய்கையிலும் தம் வீரத்தின் முத்திரையைப் பொறித்தனர். ஒரு வீரன் கூறுகிறான். “என் தலைவன்முன் நிற்காதீர்; அவனை எதிர்த்துக் கல்லறைக்குச் சென்றவர்கள் பலர்’