பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
129

இழுத்துப் பிடித்து நிறுத்திக் கட்ட அந்தக் கைகள்தாம் உதவின; கைகள்போல் உதவுபவர் நண்பினர்; இந்த நட்புத் தனி மனிதனுக்குத் தேவைப்படுகிறது.

நாட்டு அரசுக்கும் நட்பு அவசியமாகிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு உறுதி செய்யப்படுகின்றன. அமைதியான காலத்தில் பொருள் உதவி கிடைக்கிறது; போர்க்காலத்தில் படை உதவி கிடைக்கிறது.

80. நட்பு ஆராய்தல்

நட்பு ஓர் ஒட்டு நோய்; பழகிவிட்டால் விடமுடியாது; உன்னை ஒட்டிக்கொள்வதற்கு முன் அதனால் உனக்கு உண்டாகும் நன்மை தீமைகளை எண்ணிப் பார்த்து உறவு கொள்க.

ஆராய்ந்து தேர்ந்து எடுத்துக்கொள்ளாத நட்புச் சாகும் வரை தொடர்ந்து துயரம் தரும்.

குணம், குடிமை, குறைகள், அவர்தம் சுற்றத்தினர் இவர்களை ஆராய்ந்து நட்பை அமைத்துக்கொள்க.

நற்குடியில் பிறந்து உன் நன்மைகளைக் கருதி உனக்கு உண்டாகும் பழிகளை எதிர்த்துப் போக்குபவனை எந்த விலை கொடுத்தும் நட்பாக ஏற்றுக்கொள்க.

கேட்பவர் வருந்துவதாயினும் அதனைப் பொருட்படுத்தாது அழச்சொல்லி இடித்துக்கூறி உலக இயல்பு இஃது என்று அறிவுறுத்த வல்லவர்தம் நட்பினை ஆராய்ந்துகொள்க.

9