பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25


உன் நண்பன் மானமுள்ளவன்; கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும்; நீ நன்மைகள் பல செய்திருக்கிறாய்; என்றாலும் அசதியில் வசவு உன் சொற்களில் ஏற்பட்டு விடுகிறது. அவன் மானமுள்ளவன்; நிதானம் இழந்து விடுகிறான்; நல்லதை எல்லாம் மறந்துவிடுவான்; ஒன்றை வைத்தே ஓயாமல் பகைமையை வளர்ப்பான்; அவன் உன் நண்பன்தான்.

தீ சுட்டுவிட்டது; மருந்து போட்டதால் புண் ஆறி விட்டது; வடு மட்டும் தெரிகிறது; அதனைப்பற்றி நீ கவலைப்படுவதே இல்லை.

உன் நண்பன்தான். அவன் சுடுசொல் உன் நெஞ்சில் வடு உண்டாக்கிவிட்டது. அஃது ஆறவே இல்லை; அஃது ஏன்? சொல்; அஃது ஆறாது.

பத்திரப்படுத்திவை; உன் சினத்தை வெளிக்காட்டாதே; சிரமமான காரியந்தான்; நீ கிரமமாகப் படித்திருக்கிறாய்; பக்குவப்பட முடியும்; பழகிக் கொள்; பண்புடையவன் ஆகி விடுவாய்; சினம் அடக்கு; அறம் உனக்கு நண்பன் ஆகி விடும். அறம் உன்னைவிட்டு விலகாது; பிறகு நீ தவறே செய்யமாட்டாய்; சினத்தை அடக்குவது அடக்கத்தில் தலையாயது; முதன்மையானது.

14. ஒழுக்கம் உடைமை

இமயத்தின் உச்சி உயரமானது; அதனை நச்சி ஒருவன் ஏற முனைகிறான்; அதற்கு ஆற்றல், பிடிப்பு, நெஞ்சுறுதி இவை தேவைப்படுகின்றன; ஒழுக்கம் உயரமானது; அஃது உயர்வு தருகிறது. அஃது அவனை மிகவும் உயரத்தில்