பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

காமுற்றார் = காமம் அதிகமானவர்,

(1133). காம்பு = மூங்கில், (1272). கaயார் = சினம் கொள்ள மாட்டார்,

(1208). காயினும் வெறுத்தாலும், (707). காயும் = சுடும், (77); கோபப் படுவாள், (1313, 13:19, 1320). காய்தி = வெறுக்கின்றாய், (1245). காய்வார் தீக்காய்கின்ற வரைப்

போல, (691ர். காய்வு = கோபப்படுதல், கோபம்,

(1246). காரணங்காட்டுதல் = காரணங் காட்டி

விளக்குதல், (929). காரணத்தின் = காரணம் எதுவு

மில்லாமல், (530). காரணம் = தோற்றுத்துக்கு மூலம்,

காரணம், (270, 529, 929). களிகை = அழகு, (571, 777, 1262), கார் = இருண்ட, (287). காலத்தால் = காலத்தோடு பொருந்த,

(686). காலத்தினால் = ஆபத்து ஏற்பட்டக்

காலத்தில், (102).

o

காலத்தோடு

பொருந்த, (686). காலமறிதல் = பலமுள்ள அரசன் தனது பகை மேல் படை எடுக்க ஏற்ற காலத்தை அறிதல், (49). காலம் = பொழுது, (483); காலத்தை, (483); தகுதியான காலம், (484); ஏற்ற காலம், (485, 631); வெல்லும் காலம், (487); தக்கக் காலம், (675); நேரம், வேளை (687); காலமறிந்து, (696); நட்புக் காலம், (830); நோய்க்கு மருந்து கொடுக்கும் காலம், (987). காலம் கருதி = நேரம் பார்த்து,

சமயம் பார்த்து, (687).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

காலை = காலத்தில், (799); அறம், பொருள், இன்பங்களை அடையத்தக்க இளமைக் காலம், (937); பொழுது, (1094); முன்னே, (1226); விடியல் நேரம், (1225). காலைக்கு = விடியும் பொழுதுக்கு,

(1225). கால் = பொழுது, (36, 248, 379, 674, 859 1064, 1104); உருளை, (496); சேற்று நிலத்தில் காலடி

அழுந்த, (500); ஆராய்ந்து பார்த்தால், {710); சேரும் பொழுது, (733); கழுவாத

கால்கள், (840); அடிமரம், (430, 930, 1030); முளை, (959); காம்பு நீக்காமல், (1115); பிரி யும் பொழுது, (1166): வாராத பொழுது, (1179); தூங்கும் போது, விழிக்கும்போது. (1218).

கால் ஆழ் = கால் புதைகின்ற, (500).

கால் கொன்றிட = காலை வெட்டிச்

சாய்க்க, (1030}.

காவான் = மன்னன், (560).

காவாக்கால் = அடக்காவிட்டால்,

(127, 301, 305).

காவாதான் = காக்க முடியாத அரசன்,

(435).

காவாது = பாதுகாக்காது, (535). காவார் = பாதுகாக்காதவர், (127).

காவான் = அரசு நெறிகள்படி பாது காக்கவில்லையானால், (560).

காழ் = கொட்டை, விதை, (1191).

காழ்த்த விடத்து = காழ்தல், முதிர் தல், வயிரம் போல் திண்மை அடைந்தவிடத்து, (879).

காழ்ப்ப = முதிர்ந்த, மிகுந்த, மிகுதிய,

(760).

கானம் = வனம், காடு, (772).