பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

+++

அதற்கேற்ப, ஒர் ஊரிலுள்ள குடிவாழ் ஆண்-பெண் இரு பால்ருக்கும் அன்பு உருவாகும். அந்த அன்பு ஆசையை ஏற்படுத்தும், ஆண் பெண் ஆசை களவாகும்; பிறகு, ஊரார் போற்றும் இல்லறமாகும். இல்லறத்தின் கண் ஊடலுண்டு. காம நோயைப் பரப்பிவிடும் கூடலுண்டு. அதற்கு மாமருந்து புணர்ச்சி இன்பமாகும். இந்த இன்பம்கூட இருபாலரிடையே துலாக் கோல் போலச் சமன் படுத்திக் கொண்டே சென்று மக்கட்பேற்றை நல்கும். வாழ்வ்ாங்கு வாழும் இவ்வளவு பண்புகளைக் காமம் வழங்கு வதால், அதனை ஆதித் தமிழர் கள் வாழ்க்கையின் நிறைவு என்று பெருமை யாக எண்ணி காம மனநிறைவோடு தங்களது வாழ்க்கையை நடத்தினார்கள். காமம் என்ற ஒரு சொல்லில் இவ்வளவுப் பொருட்கள் இயற்கையாகவே அடங்கி இருந்ததால்தான், திரு வள்ளுவர் பெருமான் காமத்துப் பாலை திருக்குறளின் இறுதியிலே வைத்துள்ளாரோ என்பதை எண்ணி மகிழ்கின்றோம். மேற்கண்ட காரணங்கள் அதற் கான காரியங்கள் நடத்தும் ஆற்றல் அந்த காமம் என்ற சொல்லுக்குள் இருப்பதால், அத்தகைய சொல் தமிழ்ச் சொல் தான் என்பதே இறுதியை அறுதி யிட்டு உறுதியாகக் கூறலாம். இதற்கு ஏன் சொல் ஆய்வு?. சொற் பொருளே போதுமே!

காமம் விடு காமத்தை விடு, (1247). காமன் = காதலுக்குத் தெய்வம்,

(1197).

காதலுக்குக் கடவுள் காமன், அதாவது மன்மதன், ரதி என்ற இணை தெய்வங்கள் என்று சிலர் கூறுவதுண்டு! ஆண் டாண்டுதோறும் மன்மதனை எரித்தாரா சிவபெருமான் இல்லையா? என்ற போட்டி எழுந்து, ஊருருக்கு காமன் எரிந்த, எரியாத லாவணிப் போட்டி நடந்து, கலவரம், குத்து வெட்டு போன்ற குழப்பங்கள் கூட நடந்த காலம் உண்டு. கடவுள் என்ற சொல்லைத் திருக் குறளில் எந்த ஒரு இடத்திலும் ஆட்சி செய்யாத திருவள்ளுவர் பெருமான், காமத்துப் பாலுக் காகவா கடவுளைக் கற்பிப்ப்ார்? சிந்திக்க வேண்டும்? காதலரிடத்தே நின்று வருத்து கின்ற காமன் ஆண் பாலாகக் கூறப்படும் காதல்; அதாவது, பெண் பாலை, மகளிரை வாட்டி வருத்தும். ஆண்பால் காதலைக் காமன் என்று ஆண்பாலாகக் கூறு வதும், ஆண்பாலரை வருத்தும் பெண் பால் காதலை அணங்கு” என்றும் குறிப்பிடுகிறார் திரு வள்ளுவர். இது உலக வழக்கு (918, 1081, 1082 என்ற குறட் பாக்களில் காணலாம் வள்ளுவர் பெருமான் கருத்தை. நூல் மரபுக் காக இவ்வாறு சொல்வதுண்டு. எனவே, காமத்துக்கு என்று ஒரு கடவுளோ, தெய்வமோ கிடை யாது. ஆனால், விழா எடுத்து, லாவணி பாடியது பழங்காலத் தில் ஆரியர் நுழைவுக்குப் பின்பு வாழ்ந்த தமிழர்கள். . காமுறுதல் = விரும்புதல், (402). காமுறுவர்= விரும்புவர் (399, 649). காமுற்றற்று பெற விருப்பப்

பட்டது போன்று, (402).