பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

யிரத்தல், (680); உற்ற குறை, (908).

குறை பெறின் = உடன்பாடு செய்து கொள்ள இசைந்தால், இணக் கத்துக்கு இசைந்தால், (680).

குறை முடியார் = குறைகளை

நீக்கமாட்டார், (998).

குறையின் = ஏற்ற அளவிற்குக்

குறைந்தால், (941).

குற்றத்தார்க்கு = குற்றமுடையவர்

களுக்கு, (924).

குற்றத்தின் = குற்றங்களிலிருந்து,

(502).

குற்றம் = பிழை, தவறு (171. 188, 190, 433, 434, 436, 504, 549, 604}; குடிகளுக்கு

வேண்டியவற்றைச் செய்யாமை யால் வரும் குற்றம், (609). குற்றம் கடிதல் = காமம், கோபம், ஆசை, மானம், மகிழ்ச்சி; மதம் என்ற ஆறு வகைப்பட்ட குற்றங்களையும் ஒருவன் நீங்குதல், (44). குற்றம் மறைப்பான் = குற்றம் நேராத

வாறு மறைப்பவனது, (1029). குன்ற = குறைவுபட, (134), கெட,

(898) தாழ, (961). குன்ற நினைப்பின் = ஒருவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்தால், (898). குன்ற மதித்தல் = அவமதித்தல் என்கிறார் மணக்குடவர். 'ஒருவன்

திருக்குறள் சொற்பொருள் கரபி

கெட்டுவிட நினைப் பாரானால்' என்கிறார் பரிமேலழகர், (898). குன்றன்னார் = குரையாத, (601);

குறைவற்ற, (793). குன்றல் = குறைதல், (811). குன்றன்னார் = மலையைப் போன்ற பெருமை, புகழை உடையார், (898). குன்றா = குறையாத, (601): குறை

யில்லாத, (793). குன்றி = குன்றுமணி எனப்படும் ஒரு தானிய வகை, (277, 965). குன்றிக்கால் = குறைவு படுமானால்,

(14). குன்றி மூக்கின் = குன்றி மணியின்

மூக்க்ைப் போல, (277). குன்றின் = குறைந்தால், (990);

மலைபோல், (965). குன்று = சிறிய மலை, மேடு, (29,

758, 898). குன்றும் = குறைந்துவிடும், குறைவு

படும், (17, 239, 560). குன்றுவ = ஒழுக்கம் குன்றும்

செயல்கள், (954, 965). குன்றுவர் = தாழ்ந்துவிடுவர் (965). குன்றேறி யானைப் போர் கண்டற்று = மலை மீது ஏறி நின்று கீழே நடக்கும் யானைப் போரைப் பார்த்தது போல, எவராலும் எளிதில் பார்க்க முடியும், (758).

கூகை = கோட்டான், (481).

கூடலின்= காதலன் காதலி கூடி முயங்

குதலின்போது, (1327, 1328).

கூடற்கண் = நாயகன் நாயகி கலந்து

கூடும்போது, (1284).

கூடாது = சேராது, (887).