பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

147

கூடா நட்பு = மனதில் உண்மை யான நட்பு இல்லாமல் வெளியே நட்பு போலிருக்கும் நட்பு, (33). இது திருக்குறளின் 33-வது அதிகாரம். மனதால் நட்பு கொள்ளாமல், வெளியே நட்பாளார் போல நடிப்பது. இவ்வாறு நடிப்பது இழி நட்பு: சிறப்பற்ற நட்பு: போலி நட்பு: முகநக நட்பு. இந்த நட்பால் உண்டாகும் கேடுபாடுகளை விளக்கும் அதிகாரம் இந்த கூடா நட்பு'. கூடி = மனமொத்து, பாச உணர்வு சிதறாமல், (765); ஒத்த அன்பு உணர்வினராகி, (1330). கூடிய = கலந்தின்பமுறும், (1254). மணக்குடவர் இந்தக் கூடலை "கூடுதற்கு அரிய என்கிறார். கூடும் காரணமாக, (1264). கூடிய காமம் = காதல் உணர்வு களால் கூடும் உணர்ச்சி, (1264). கூடியார் = இடைவிடாதுக் கூடிக் கூடி இன்பம் பெற்றவர்கள், (1109). கூடின் = புணர்ச்சி இன்பத்திற் காகச்

சேர்ந்தால், (887). கூடும் = இயலும், (269); பெறலாம்,

(484). கூடுவேம் = ஒன்று சேரக் கடவோம்,

(1310). கூத்தாட்டு = கூத்தாட்டம் நடத்து

கின்ற, (332). கூத்து = நாடகம், (332). கூப்பி = குவித்து, (260). கூம்பும் = குவியும், இதழ்கள் மூடும், (425); காலம் பார்த் திருக்கும், (490), கூளியது = கூர்மையானாது, (759). கூர்ங்கோட்டது = கூரிய கொம்பு

களை உடையது, (599).

கூர்ந்து மிகுந்து, (1010). கூலி = பயன், வேலை செய்த வரை,

வரும் உழைப்புக் கூலி, (619). கூழ் சோறு, கூழ், உணவு, (54); பொருள், (381, 554); பயிர், (550). கூழ்த்து = உணவுகளை உடையது,

(745). கூறப்படும் சொல்லப்படும். இது செயற்பாட்டு வினை அல்ல; கூறவேண்டும் என் பதைப் போன்றுணர்வு. எடுத்துக்காட்டு மீற்று வியங்கோள் முற்றுவினை என்கிறார் நன்னூல் உரை கண்ட இராமானுசர், (186). கூறல் = சொல்லுதல், கூறுதல்,

(100, 538); கூறாதே, (1236). கூறாமை = சொல்லாமை, (701,

704). கூறான் = சொல்ல மாட்டான், (181). கூறிவிடும் = சொல்லிவிடும், (980). கூறின் = சொல்லின், (22); சொல்லிச்

சூதாடுவானானால், (933). கூறும் = சொல்லும், (386). கூறுவான் சொல்லுவான், (186).

  • * : கூற்றுவனை, இயமனை, (89). கூற்றம் = இயமன், (269, 1085). கூற்று இயமன் உடலைக் கூறு படுத்துபவன், (326, 765); பகுதிகளை உடையது, (950); கேடு, (1050); இயமன், (1083). கூன் கையார் = கைபொத்தியவர். மணிக்கட்டு வரை விரல்களை மடக்கிக் கூனைப் போல வளைத்த படியே குத்துபவர். இது குத்துச் சண்டை (Boxer's) வீரர்களது உயிர் போக்கும் விந்தைகளுள் ஒன்று, (1077).