பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி

சிதைக்கலாதார் = சீரழிக்க மாட்டார்

தவர்கள், கெடுக்க மாட்டாதவர் கள், (880). சிதையாமல் = சிறப்பாக உள்ள உருவம் அழியாமல், (573). சிதைவிடத்து = மனச்சோர்வு அல் லது தளர்ச்சிவந்தவிடத்து, (597). சிதைவின்றி = அழிவின்றி, (112). சிமிழ்த்து - பிணித்து சிமிழ்தல் என் றது அவன் வாய்மேல் விரல் அது படவிளித்தல் என்கிறார் காளிங்கள். சிவிகை = பல்லக்கு, கவிகை, (37). சில = சில வகையான சொற்

களால், (649). சிலர் = சிறு எண்ணிக்கையினர்,

(649). சிறக்கணித்தாள் = கண்களைச் சுருக்கிக் கொண்டவள் போல, (1092}. சிறந்த = மிகுதியாக, (531). சிறந்தமைந்த - சிறந்த பெருமை களைப் பெற்ற பெரியோர்கள், (900). சிறந்தான் = நண்புக்கு நல்லவன்,

அன்புடையான், (515). சிறந்து = சிறப்பாகத் திகழ்ந்து, (900). சிறப்பின் = உயர்வின், (961). சிறப்பினும் = மிக செல்வாக்கைத் தரும், உயர்வைக் கொடுக்கும், (311). சிறப்பு = வீடுபேறு, வானுரை தெய்வ நிலை, (31, 358); மதிப்பு, பெருமை, (58, 74, 75); நன்வினைகளது இன்பம், (590, 630, 752); பொதுவல்லாதது,

அதாவது பெருமை, சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள், (972); கல்வி, செல்வங்களால் பெற்ற சிறப்புகள், (977); நாணு டைமைச் சிறப்பு, (1012). சிறப்பென்னும் = சிறப்பு என்னும் வீடுபேற்றுக்குக் காரணமாகிய, (358). சிறப்பொடு = கோலாகல விழா

வோடு, (18); மதிப்பும், (195). சிறிது = சிறியது, (102); சிறிய தாக,

(412, 1075, 1301, 1032). சிறிய சுருக்கத்து = குறைந்த

வறுமைக் காலத்து, (963). சிறியர்: கீழானவர், (26). சிறியவர் = கீழ் மக்கள், (815). சிறியர் சிறிதளவு உடையார் (680); அற்ப குணம் உடையவர், (976). சிறு - இன்னாத, (1097). சிறுகாப்பின் = காக்க வேண்டிய

இடம் சிறிதாகிய, (744). சிறுகும் = சுருங்கும், (568). சிறுகுவ = சுருங்குவதற்குக் காரணமான செயல், சிறுமை யுள்ளவை, (798). சிறுதுணி = கொஞ்ச காலமுள்ள

வறுமைநிலை, (1010). சிறு நோக்கம் பாராதபோது

பார்க்கும் சிறுபார்வை, (1092). சிறு பொருள் = முயற்சி இல்லாமல் சுலபமாகக் கிடைக்கக் கூடிய சிறு பொருள், (870). சிறுமை = குற்றம், துன்புறுத்தும் தன்மை, (98); காமம், (431);