பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

439

உண்டி சுருக்கல் முதலியன, (19, 262, 263, 265, 266); தவ வேடத்தில், (274).

தவல் = கேடு, அழிவு, தவறுதல்,

(853); துன்பப்படுதல், (856).

தவறிலர் - தவறு செய்யாதவர்,

தவறுதல் இல்லாதவர். (1325).

தவறு = குற்றம், (469, 1154, 1286,

1321).

ா = கெடாமைக்கு ஏதுவாகிய, (397).

தவா அ = கெடாத, வழுவாத,

(361). தவா அது = ஒழியாமல், முடி

வில்லாமல், (368).

தாவா வினை = கெடாமைக்குரிய

செயல், (367).

தவ்வை = தமக்கை, மூதேவி, (167).

தழால் = தழுவுதல். (திருக்குறளில் வருகின்ற 53-வது அதிகாரம். ஒருவன் தன்னைச் சுற்றி அன்புக்காகவும், அலுவல்களுக் காகவும் உறவின் முறைக்காக வும், தழுவி நிற்கும் சுற்றத்தார் கள, எநத காரணங்களைக கொண்டும், தன்னை விட்டுப் பிரியாமல் இருக்க, அவர்களை அவன் தழுவிக் கொள்ளும் பழக்க வழக்கப் பண்புகளைப் பற்றிக் கூறுவதே, சுற்றந்தழால் என்பதாகும். தழால் என்றால் தழுவிக் கொள்ளுதல் என்று பொருள்படும்.)

தழீஇ = தழுவி, அனைத்து, (544,

913).

தழீஇயது = நட்பாக்கிக் கொள்வது,

(425).

தளர்ந்து : தவறி, (716),

தளிர்த்து = தழைத்து கொழுந்து

விட்டு, (78).

தளிர்ப்ப - இன்பத்தால் தழைக்க,

தளிர்க்குமாறு, (1106). தள்ள- குறைவில்லாத (731). தள்ளது - தவறாது, (290). தள்ளாமை = தவறாமை, (596). தள்ளும் = தவறிப்போகும், (290). தறுகண் = வீரம், மூர்க்கம், (783). தற்கொண்டான் = கணவன், தன்னை மணந்து கொண்டவன், (56). தற்று = இறுகக் கட்டிக் கொண்டு,

(1023).

தனக்கு = தானே, தன் பொருட்டு,

தனக்காக, (847).

தனித்தொழிய = தனித்துக் கிடப்ப,

(814).

தனிமை = தனித்திருக்கும் தன்மை,

(814). தன் = தன்னை, (51, 56).

தன்காத்து = கற்பிலே இருந்து தவறாமல், தன்னைக் காத்துக் கொண்டு, (56).

தன்செய்து = தன்னை வலிமையும், வளமுமாக்கிக் கொண்டு, (878),

று = தன்னையும் வருத்திக் கொண்டு, (1009).

தன் நாளை - தனக்குச் சென்ற

நாளை, (776).

தன் நோய் = தன்னாலாகிய நோய். தன்மை = இயல்பு, (1144).

தன்மைத்து = இயல்புடையது,

(355).

தன்மையவர் = இயல்புடையவர்,

(855).

தன்னின் = தன்னைக் காட்டிலும்,

(250, 603). தன்னை = தன்னை, (206, 208).