பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத்தால் = நல்லுழால், நல் வினைகளால், கடவுளால் என்றும் கூறுவர், (619). தெய்வத்துள் = கடவுள்களுள், சிறு தெய்வங்களுள், தேவதை கள் என்றும் சொல்வர், (50). தெய்வத்தோடு = கடவுளுக்கு, தேவதைகளுக்கு, சமமாக, நல் வினைகளுக்குரிய பலனாக, (702). தெய்வம் = வழிபடும் தேவர், (43);

'கணவனே கண்கண்ட தெய். வம்’ என்பர் சான்றோர். கடிவுள் என்பர் சிலர். விடாமுயற்சி

யெனும் இயற்கை அறிவாற்ற,

லின் முனைப்பான துடிப்பு, தெய்வம் என்பாருமுண்டு. தெரிதல் = ஆராய்ந்து தெளிதல்,

(717). தெரிந்த = ஆராய்ந்தெடுத்த, (462);

ஆராய்ந்த, (1172). தெரிந்து = ஆராய்ந்து தெளிந்து, {23, 132, 186, 501, 712, 1172). தெரிந்து செயல் வகை = இது திருக்குறளில் வரும் 47-வது அதிகாரம். தான் செய்யப் போகும் ஒரு செயல் குறித்து, நன்றாக ஆராய்ந்து தெளிந்து,

நன்னெறியில் நின்று, செயல்பட !

வேண்டிய திறமைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. தெரிந்து வினையாடல் = திருக் குறளில் வரும் 52-வது அதி காரம் இது. ஒரு செயலை, யார்,

எந்த வினைகளை, எப்படி தமது |

அறிவாற்றலால், சிறப்பாக,

அறிவாளர் போற்றும் வகையில் வெற்றிகரமாகச் செய்து முடிப் பார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே, அவரவர்களிடம் அந்தந்தச் செயல்களை ஒப்படைத்துச் செய்யச் செய்ய வேண்டும் என் பதற்கான அறிவுரைகள் கூறப் பட்ட அதிகாரம் ஆகும்.! தெரியா = ஆராயாத, (583). தெரியான் = அவரவர் உடற் தன்மைகளையும், அதற்கேற்ற உணவு வகைகளையும் காலத் தையும் ஆராயத் தெரியாதவன், (947). தெரியுங்கால் = குறிப்பால் கருத் தறிய வேண்டி, ஆராயும் நேரத்தில், (503). தெரிவார் = அறிவார், உணர்வார்,

(104, 329). தெரிவான் = சிந்தித்து ஆய்பவன்,

(27). தெருளாதான் = மந்தப் புத்திக் காரன், தெளிவான அறிவில்லாத வன், (249). தெவ் = பகைவர், (639). தெவ்விர் = பகைவர்கள், (771). தெளித்த - அவர் அன்போடு தெளி

வித்த, (1154). தெளிந்தார் = தம்மைச் சந்தேகப்

படாதவர், {143). தெளிந்தார்க்கு = உண்மை மெய்ப் பொருளை உணர்ந்தவர்க்கு, (353),