பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

447

தெளிந்தான் = நம்பினவன், ஐய மகற்றிக் கொண்டவன், சந் தேகம் நீங்கியவன், (508, 510).

தெளிவு = அறிவான நம்பிக்கை, ஆராய்ந்து காணும் அறிவின் உண்மை, (464, 502, 510, 513).

தெள்ளியர் = அறிவுடையார், (374).

தெறல் = அழித்தல், (264).

தெறும் = தெரியாமல் வளர்ந்து அழிக்கும், அல்லது கெடுக்கும், (67.4, 883), தெறுஉம் = சுடுகின்றது, (1104). தெற்றென்க = அறிந்து கொள்ள

வேண்டும், (584). தென்புலத்தாள் - நமக்கு முன் இறந்தோர், பிதிரர், குடும்பத்தில் இறந்த மூதாதையர் (43).

தேய= போக, குறைய, அகல, (95). தேயத்து = இடத்திற்கு, (753). தேயும் குறையும், இழந்து விடும்,

(888). தேய்க்கும் = அழித்துவிடும், (555);

குறைக்கும், (567). தேராது = ஆய்ந்து பார்க்காமல், (509). தேரான் = ஆராய்ந்து, அறியாத

வனாகி, (144, 508, 510). தேரினும் = ஆராய்ந்து தெளிந்

தாலும், (132).

தேரின் = ஆராய்ந்து சொல்லும்

போது, (249). தேர் = தேர் எனப்படும் வலிய

வண்டி, (496). தேர்க்கு ரதம் போன்ற வண்டிக்கு,

(667). தேர்ச்சி = மன்னனுக்கு ஆராய்ந்து கூறக்கூடிய ஆலோசனை, (635). தேர்ந்தபின்= ஆராய்ந்த பின்பு, (509).

தேர்ந்து = ஆராய்ந்து பார்த்து, (441,

462, 541, 634).

தேவர்= வானுறைபவர், (1073).

தேறப்படும் = நம்பப்படும், (501);

தெளியப்படும், (589),

தேறல் = தெளிவு பெறல், (825). தேறற்க = நம்பக்கூடாது, (509). தேறற்பாற்றன்று = தேர்ந்து தெளிவு பெறுவது முறையானது ஆகா, நம்புதல் கூடாது, 1825). தேறாவிடினும் = நம்பாவிட்டாலும், தெளிவு பெற்றிராவிடினும், (876). தேரான் = அறிய மாட்டான், (848); சேராதவனாக, நட்பு செய்து கூடாமலும், (876).

தேறிய = தெளிந்த, (514).

தேறியார் = நம்பித் தெளிவடைந்

தவர், (1154). தேறின் = பகைவனைப் பற்றி

ஆராய்ந்து தெளிந்திருப்பினும், (876). தேறுக = சந்தேகப்படாமலிருக்க,

நம்புக, (509). தேறும் பொருள் - அவரவர் ஆற்ற லுக்கேற்ற செயற்பாடுகளை, நம்பத் தக்கவைகளை, (509).

தேற்றம் = மனங்கலங்காத தன்மை, (513); நம்பப்படுதல், (766);