பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 திருக்குறள் சொற்பொருள் கரபி

அறிஞர் பெருமக்களை மதித்து, அவர்கள் நட்பை நாடி நட்டு, அறியாமை அகற்றி, அறிவைத் தேடும் வறியவர்கட்கு இரங்கி உதவி புரியும் ஆசான் - மாணவர் முறையிலே, அமைதியையும், புகழையும் பெருக்கும் வாழ்க்கையை நடைமுறைக்கு ஏற்றவாறு நலம் நல்கும் சிறப்பே தமிழ்ப் பண்பு என எண்ணி, இந்த உயர்ந்த வாழ்க்கையை மொழி உருவில் உதவுவதே வெண்டளை வெண்பாவின் பயனாகும்.

வெண்டளைகளில் நேரசையும், நேரசையும் இணைவது - அறிஞர்கள் அறிஞரோடு இணைந்து அறிவை வாரியென வழங்குவதற்குச் சமம். இந்த இணைப்பு அடிக்கடி நிகழாது, அரிதாகவே அமையும்:

நேரசையுடன் நிரையசையும், நிரையசையுடன் நேரசையும் கூடுவது, அறிஞருடன் மற்ற மக்களும், மற்ற மக்களுடன் அறிஞரும் கூடி அறிவு நலனைப் பெருக்குவதற்கான சான்று! இந்த இணைப்புதான் உலகில் அதிகமாக நடைபெறும்.

இதற்கேற்பவே திருக்குறளில் நேரும் நிரையும், நிரையும் நேரும் வரும் அசைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. காரணம், அறிஞருடன் சாதாரண மக்களும், சாதாரண மக்களுடன் அறிஞரும் இணைந்து படிக்கும்போதுதான் அறிவு நலம் பெருகும் அறிவான சமுதாயம் அரும்பி வளரும் என்பது திருவள்ளுவரின் அவாவோ - என்னவோ?

நேரசையோடு - நேரசை அமையும் சான்றோர் பழக்க வழக்க இணைப்பு: எப்பெப்போதோ உண்டானாலும், அந்தக் கூடுதல் அருமையும் பெருமையும் உடையது. எடுத்துக்காட்டாக, 397-வது குறளான, 'யாதானும் நாடாமால், ஊராமால் என்னொருவன், சாந்துனையும் கல்லாத வாறு என்ற குறள், காய்ச்சீரோடு காய்ச்சீரின் இயையே குறள் முழுவதிலும் பெற்றுள்ளதால், இத்தகையக் குறட்பா திருக்குறளில் அருமையாகவே அமைந்துள்ளது. காரணம். நேர் அசைச் சீர்கள் சான்றோர் கூட்டங்கள். "சான்றோர் - சான்றோர் பால ராதல் எனும் புறப்பா; திருக்குறள் ஞானம் பெற்ற பாவாக அமைந்துள்ளது. -

இவை போன்ற இலக்கணத் திருவிளையாடல்களைத் திருக்குறளில் ஞான விளையாட்டாகத் திருவள்ளுவர் விளையாடுவதில் திறன் பெற்ற மேதை என்பதால் தான், அவர் திருக்குறளை எழுதிட வெண்பா யாப்பை ஆய்ந்து, அதிலும் சுருக்கமாக குறள் வெண்பா யாப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனது அறிவுக்கேற்ற பாவினக் கருவியாக்கிக் கொண்டார். குறிப்பு :- திருக்குறள் சொற்பொருள் சுரபி' எனும் இந்த நூலில், ஏதாவது விடுப்பட்டிருந்தால், கருத்துக்கள் கூறும் நிலை ஏற்பட்டால், அன்பு கூர்ந்து அஞ்சலில் தெரிவித்தாலே போதுமானது. அடுத்தப் பதிப்பில் அந்தப் பொன்னான எண்ணங்களை நூலில் சேர்த்து அழகுப்படுத்தத் தயாராக இருக்கிறோம். (ஆ - ர்)