பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 43

எனவே, நேரசையும், நிரையசையும் ஒன்றிணையும் வாய்ப்பு வெண் பாக்களில் பெரும்பான்மையாக உண்டு. இந்த வெண்சீர் வெண்டளை என்று கூறப்படும் வெண்டளைகள். தூய்மை ஒழுங்கை, நேர்மை யாளரும், நேர்மையாளருமானச் சான்றோர்கள் தங்களுக்குள்ளேயே வெண்பா இலக்கண அணிகளைப் போலச் சந்தித்து, நாட்டுக்கு அறத்தை வளர்க்கும் சான்றாண்மை இயக்கத்தையே - இது புலப்படுத்தும் என்று, புறநானூறு 218வது பாடல், சான்றோர் சான்றோர் பால ராப' என்று கூறுகின்றது. இதனால்தான் வெண்டளைகள் வரும் வெண்பா, தமிழ் மொழியில் அறிவமுதமூட்டும் முதற்பாவாக அமைந்துள்ளது.

வெண்பா என்றால் வெள்ளைப் பா என்பர் அறிஞர். அதாவது, தூய்மையின் அடையாளமாகிய வெண்மை வருதல் இதனாற்றான். அறவுரைகளையும், நீதி நூற்களையும் வெண்பாக்களால் தமிழ்ப் பெரியோர்களும் எழுதியிருப்பதற்கும் இதுதான் காரணம்.

வெண்பா நிறத்தையும் தன்மையையும் சுட்டும் என்பதை அந்தப் பாவால் நாம் உணரலாம். குற்றமற்றத் தூய்மை, குற்ற மறுக்கும் கருணை யுடையதே அறம்! அதனால்தான், “அந்தணரென்போர் அறவோரே என்றார் திருவள்ளு வர். வெண்பாவுக்கோர் புகழேந்திப் புலவர் என்பர். வெண்பா புலி வேலு செட்டியார் இருபதாம் நூற்றாண்டிலும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது அறிவு சிலிர்க்கும் வெண்பா புனையும் புலமைத்திறன்தான் என்றால் மிகையாகா. அதனால்தான் திருவள்ளுவர் பெருமானும், உலகுக்குரிய உண்மை தத்துவங்களை, அறநெறிகளை, வாழ்வியல் ஞானங்களை மக்களுக்குக் கூற உணர்த்த நினைத்தபோது அவருக்கு வெண்பா என்ற இலக்கண யாப்பே நினைவில் ஊஞ்சலாடியது.

அந்த வெண்பாவை மேலும் சுருக்கி ஏழு சீர்களால், தாயுள்ளக் கருணையோடு தமிழ் மாந்தர்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்கள் இனத்துக்கும், மத, இன, சாதி, பேத வேற்றுமை என்று ஏதும் தோன்றாதவாறு; உலகப் பொது மறையை குறள் வெண்பாவால், அறமாக அற நூலாக அவர் மேதினிக்கு வழங்கினார்.

இதில் என்ன சிறப்பு என்றால், உலகுக்குத் திருவள்ளுவரின் பயன்படு உணர்வு, சுருக்கமாகக் கூறியதிலும், பொருள் சுரப்பியிலும், மிகக் குறுகிய பாவின யாப்பிலும், குறள் உள்ளே சலசலவென ஓசையிட்டோடும் அருவிநீர் போன்ற இனிய இலக்கியச் சுவையிலும், வடலூர் வள்ளல் பெருமான் கூறியதைப் போல குறள் ஞானத்துள் ஞானமாகவும், திருவள்ளுவர் ஞானியருள் தலையாய ஞானியாகவும் விளங்குவதே வாழ்வியல் நூல் இலக்கிய உலகில் அது ஒரு தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.

பதினாயிரம் பகவத் கீதையிலும் திருக்குறள் உயர்ந்தது, என்று வள்ளல் பெருமான் கூறுவதற்கேற்ப இதுபோன்ற ஒரு நூல் இதற்கு முன்னும் தோன்றியதில்லை. இனியும் தோன்றுவதற்கு வாய்ப்பு இல்லை எனலாம்.