பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+2 திருக்குறள் சொற்பொருள் சுரபி

சுருட்டும், அசிங்கமும் ஆபாசமும் கூறும் கட்டங்கள் வருமே என்ற சமுதாய அச்சத்தால், காதலர்களை விட்டே வரம்போடு, அறிவு நுட்பத்தோடு, சிந்தனை ஒழுக்கத்தோடு, அந்த உண்மைகளைப் பேச வைத்தார். இது மட்டுமன்று திருவள்ளுவர் பெருமானின் சீரிய உலக ஞான போதனை:

திருக்குறளில் அவர் புகுத்திய குருகுல முறை, ஆசான் - மாணாக்கர் கல்வி போதனைத் தொடர்பு. சான்றோர்களைத் துணைக் கொள்ளும் அறிவு கற்பிப்பு முறை. உலக முன்னேற்றத்திற்கும், அமைதிக்குமுரிய அந்த உயர்ந்த அறிவு துறை, இளம் பருவம், வாலிபப் பருவம், வயோதிகப் பருவம், ஆகிய எப்பருவத்தினரும் கூடிக் கற்றிடும் அந்தக் குருகுலக் கல்வி: இளைய தலைமுறைகளைச் சான்றாண்மை ஞானத்தோடு உருவாவதற்குரிய அந்த உன்னதமான முறை, நேர்மையான பண்பாளர் களாக எதிர்காலத்தில் வாழ வரும் அந்தச் சமுதாயத்தை சீர்மையான அறப்பண்புகளோடும், நிறைவான ஒழுக்கக் குணங்களோடும் உருவாக்க வேண்டும் என்ற உலகச் சமுதாயத்தின் மீது அக்கரையும் பற்றும் கொண்ட கொள்கைகளை; அன்றே தனது மனப் புத்தகத்திலே முதல் நூலாக எழுதிக் கொண்ட திருவள்ளுவர், வழி நூலாகத் தனது திருக்குறளை எழுதினார்.

அதாவது, தனது வெண்பாவில் நேர்மையாளராகிய உயர்ந்தோரை அவர் நேரசை என்ற இலக்கணமாக்கிக் கொண்டார். அதாவது ஆசானாகக் கொண்டார். அவர்களைச் சமுதாய அறிவாசான்களாக நிலை நாட்டினார் - குருகுல பீடத்தில்: அதனைப் போலவே நல்ல ஆசான்களுக்கேற்ற நிறைவான மாணவர்களும் அமைய வேண்டுமல்லவா? அதற்காக, "ஏக்கற்றும் கற்றாரே கற்றார்" என்றவாறு கற்க வேண்டிய வரிசையாளர்களை நிரையசை என்ற இலக்கண மாணக்கராக உருவாக்கிக் கொண்டார் வள்ளுவர் பெருமான். நேரசையும், நிரையசையும் உறழ்ந்து வரும் வெண்தளை என்ற வாழ்வியலறச் செங்கணிதான் - சான்றோரைத் துணைக் கொண்டு பழக்க வழக்க மாகப் பண்பு பெறும் குருகுல நடைமுறையை நாட்டும் கல்விச் சிறப்புப் பண்பு அவ்வாறானால், வெண்டளையின் முக்கியத்துவ உணர்வு என்ன? சமுதாயத்தில் - நாட்டில் - வெண்டளை அறம் பெருக்கும் நோக்கை யூட்டும். இது வெண்பா பா வினத்தின் இலக்கணத் தூய்மையின் இயல்பு. நேரசையேடு - நிரையசை பொருந்தி வரும் வெண்டளை இலக்கணம்; சான்றாண்மையாளரைத் துணைக் கொள்ளும் மற்றையோர் நோக்கத்தை யும், நிரையசையோடு இணங்கி வரும் வெண்டளை, பக்குவமான மெய்யன்பர்க்கு இதம் விளைவிக்கும் குருமார் செயல்களையும் குறிக்கின்றன. இந்த வெண்டளைகளை இலக்கண அறிஞர்கள் இயற்சி வெண்டளை என்று கூறுவர். இயற்சீர் - என்பது இயற்கை ஒழுங்கு. அறிவூட்டும் பெரியோரும், அவர் துணை பெற்று உயரும் மற்றையோருமாக நடை பெறும். உலக இயற்கையை இது சுட்டுகிறது என்பார் மதுராந்தகம் அருகே உள்ள மாம்பாக்கம் எனும் சிற்றுாரில் திருக்குறள் குருகுல பீடம் நடத்திய மேதை அழகரடிகள் தனது திருக்குறள் அறம் என்ற நூலில்.