பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 11

ஆனால், காமத்துப் பாலை மட்டும் தானே கூறாமல், நாயகன், நாயகிகளான காதலர்களை விட்டே நேருக்கு நேராக பேச வைத்து விட்டார்! ஏன் தெரியுமா?

காதலர்கள் தங்களது களவு மயக்கத்தால், காமப் போதையால், 'அன்பே, உன்முகம் முழு நிலாவைவிட அழகாக வெள்ளொளி வீசுகின்றது. உனது சொல்லில் தேனும் பாலும் தோற்று விடும்; இரவு சினம் அவளிடம் சீறியதால் சூரியன் மறைந்து மறைந்து அந்தியில் ஒடிப் போய் பதுங்கிக் கொள்கின்றான். பொதிகைத் தென்றலே நீ விடும் இன்ப நேரத்து வீச்சுதான், அவள் விடும் புணர்ச்சிப் போக மூச்சு என்று, இவ்வாறான பொய் புரட்டுகளைக் காமக் களியால் அவர்கள் பேச வேண்டிய சிற்றின்ப சூழ்நிலை உருவாகும்.

அந்த நேரத்துப் பொய்யுரைகளை, காம உளறல்களை அறம் பாடிய தனது வாயால் பாடிட திருவள்ளுவர் விரும்பாததால், பொருள் தேடும் நுட்பங்களை எழுதிய ஆணியால் பொய் புரட்டுகளைக் காமம் பெயரால் புகன்றிட மனமில்லாததால், மனச்சாட்சிக்குப் பயந்து, இன்பத்துப் பால் காதலர்களை விட்டே அந்தப் போதை உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ளச் செய்துவிட்ட உண்மை அறம் சாந்த சிந்தனையைப் போல, உலகத்திலே வேறு எந்தக் கவிஞனும் இன்றுவரை செய்திருக்கவில்லை.

அதனால்தான்; இலண்டனில் தமிழ்ப் பணியாற்றிய ஜி.யு. போப் அவர்கள், இந்தக் காமத்துப் பாலைப் படிக்க நேர்ந்தபோது வியந்தார். பேராச்சர்யப்பட்டு தனது கருத்தை சென்னையிலுள்ள பேராசிரியர் பரிதிமாற் கலைஞருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, காதலர்களுக்கு ஏற்பட்டு விட்ட இந்த காமப் போதையில்கூட, எந்த ஓரிடத்திலும் கம்பர் பெருமானைப் போல வரம்பு மீறி 'அல்குல்' என்ற உறுப்பைப் பற்றித் திருவள்ளுவர் மறந்தும்கூட அந்தக் காதலர்களை விட்டுப் பேச விடவில்லை.

'அறிதோறும் அறியாமை கண்டற்றால் - காமம், செறிதோறும் சேயிழையார் மாட்டு என்ற குறளின் காம்போதை மயக்க உரையிலேகூட அறிவுக்கு இலக்கணமாக அறியாமையைப் பற்றிக் கூறும்போது, சிவந்த அழகான நகைகளை அணிந்த பெண்ணிடம் இன்பம் நுகருந்தோறும் - அதை அனுபவிக்குந்தோறும், அரிய நூற்பொருள்களைக் கற்று, அறியு முன்பு அறியாதிருந்த அறியாமைகள் அழிந்து - புதுப்புது அறிவுணர்வு களைப் புதியனவாகக் கண்டறிவது போன்ற இன்பமாக இருக்கிறது என்று தான் கூறினாரே ஒழிய கம்பர் பெருமானைப் போல அல்குல் உணர்ச்சிகளை அந்தக் காதலர்கள் மூலமாகப் பஞ்சணையில் ஏவிப் பேச வைக்கும் அறிவைத் திருவள்ளுவர் இருந்தும் ஆட்சி செய்யவில்லை.

அதனால்தான், அறம் பொருள் அதிகாரங்களில் உலகத்தின் முன்னால் அவரே நின்று நேரிடையாக எழுதியவர், அறம் பேசியவர், காமத்துலிப் பாலே இன்பச் சுனாமி ஏற்படும்போது, பொய்யும் புனை