பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருக்குறள் சொற்பொருள் கரபி

பன்நெடுங் காலத்திற்கு முன்பு முதன் முதல் கல்வி உருவானது பள்ளிகளிலே தான் பள்ளி என்றாலே படுக்கும் இடம் என்று பொருள்: சமணர்களால் இச்சொல் உருவானது.

சமணர்கள் தாங்கள் வாழும்போது படுத்துறங்கும் இடங்களிலே தான் தனது பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் கல்விக் கலைகளைக் கற்பித்தார்கள்! நீதி நெறிகளையும், மத ஞானங்களையும் போதித்தார்கள்! அதனால் பள்ளி என்பது படுத்துத் துங்கும் இடமாக, மடமாக இருந்தது.

பிறகு, அந்தப் பள்ளி வீட்டுத் திண்ணைகளிலே இடம் மாறி, திண்ணைப் பள்ளியாக ஆயிற்று

இந்த நூலை உருவாக்கும் நானெல்லாம் கிராமத்திண்ணைப் பள்ளியிலே தான் முதன் முதலாக சதக வகை நூற்களை எல்லாம் மனனம் செய்து ஆசானிடம் ஒப்புவித்தவன். நான் மட்டுமன்று என்போன்று பன்னூற்றவர், பல கிராமத் திண்ணை ஆசான்களிடம் பயின்றவர்கள்தான். எனவே, திண்ணைப் பள்ளிக் கல்வி தமிழர்களுக்கு பண்டையக் கல்விக் கூடமாகவும் திகழ்ந்தது. அத்தகையப் பள்ளி ஆசான்கள் சான்றோர்களாகவும், அவர்களிடம் கல்வி கற்றுக் கொள்பவர்கள் மாணாக்கர்களாகவும் அமைந்ததால், அதைக் குருகுலம்' என்றும் மக்கள் போற்றினர்கள். அது வாழையடி வாழையாக வளர்ந்து தமிழ் வளத்தை ஊட்டியது.

அந்தக் குருகுல முறையை, ஆடு, மாடு மேய்த்திட சமணர் காலத்துக்கு முன்பு வந்தேறிய வட ஆரியர்கள், கல்விக்குரிய பீடமாக அதை ஏற்றுக் கொண்டு, கல்வியை ஞான பீடமாக, கலைத் துறையாக மாற்றிக் கொண்டு, அரசு போகிகளாக மாறினார்கள்.

அந்தக் குருகுலக் கல்வியாலே அரச குரு போன்ற பதவி போகங்களை அரண்மனைகளிலே அனுபவித்துக் கொண்டே, சில அரசுகளை ஆரியர்கள்.அழித்தார்கள். சுயநலத்துக்காக அவர்கள், சில அரசுகளை உருவாக்கினார்கள் உயர்ந்த ராஜ குருக்களாக மன்னர்களால் புகழப்பட்டார்கள், கல்விக் கலைகளிலே தமிழர்கள் பின்தங்கி பிராமணச் சமுதாய அடிமைகளானார்கள்.

இந்தக் குறைபாடுகளின், ஆதிக்கக் கல்வி முறைகளால், ஓரினம் மட்டுமே வளர்ச்சியுறும் என்று அஞ்சியே தனது அரும் நூலான திருக்குறளை, அதன் நெறிகளை உலகுக்கு உணர்த்தவும், நாளடைவில் தனது தமிழ் இனம் உயர்ந்திட வேண்டும் என்றும் எண்ணிய காரணத்தால், குறள் யாப்புத் தேர்வை, குருகுல நெறியில், ஆசான் - மாணவன் போதனை முறையில், சான்றாண்மைச் சால்புகளை விளக்கிக் கூறிடும் தருக்கவாத நூலாக திருக்குறளை திருவள்ளுவர் பெருந்தகை விளங்கச் செய்தார்:

இந்த அறநெறி போதனைகளைக்கூட முப்பாலின் இருபாலான அறம், பொருள் பாக்களில் மட்டுமே - தானே, நேரிடையாக - ஆசானாக அமர்ந்து, உலக மக்களை மாணாக்கர்களாக மதித்து, தாயன்பால் அன்னை ஒருத்தியின் அக்கரையோடு அந்த அறநெறிகளை உலக மக்களுக்கு அறிவுறுத்தினார்.