பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் எண்ணம்

'திருக்குறளை எழுதிட திருவள்ளுவர் வெண்பாவை ஏன் தேர்ந்தெடுத்தார்?

தமிழ்ப் பா வகைகளிலேயே மிகச் சுருங்கியது ஈரடிக் குறள் பா இனமே! ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலகநீதி போன்ற ஒரடி செய்யுள்கள் உள்ளனவே, அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, ஏன், குறள் வெண்பாவை மட்டும் திருவள்ளுவர் தேர்வு செய்து திருக்குறளை உருவாக்கினார்?

ஒளவையார் உட்பட மேற்கண்ட நூலாசிரியர்கள் எழுதிய பாக்கள் எல்லாம் செய்யுள் இனத்தைச் சேர்ந்தவை. அவை பா வகைச் சதிராட்ட யாப்புகளுள் இலக்கண நுட்பங்களோடு அடங்கிய பா இனங்கள் அல்ல. மிகச் சுருக்கமாகத் தனது கருத்தை மக்களுக்குக் கூறிட: வெண்பாவை இரண்டாக வெட்டிக் குறள் வெண்பா என்றொரு 'பா' வகையை திருவள்ளுவர் பெருமான் உருவாக்கினார்.

அதனால் தான், திருக்குறளிலே ஈரசைச் சீர்களையே அதிகமாகத் திருவள்ளுவர் ஆட்சி செய்துள்ளார். அறம் உரைப்பதற்கு அது சுலபமான அற ஆடல் வெண்பா என்றால் தூய ‘பா’ என்பது பொருளல்லவா? அதனால்: உண்மைகளை உலகுக்கு உணர்த்த - அந்தப் பா வகைத் தொடக்கமும் முடிவும் உடைய சுருக்கமான 'பா'வாக அது அமையும் என்று பொய்யில் புலவர் நம்பினார். அவரால் அது 'முதற்பா’ என்ற புகழையும் பெயரையும் பெற்றது. அவரும் முதற்பாவலர் என்றச் சிறப்பைப் பெற்றார். வெண்பாவிற்கு பெருமை சேர்த்தார்

வெண்பா என்றாலே அறம் உரைக்க ஒர் அருமையான் பா. படிப்போர்க்குச் சிக்கலை உருவாக்காத பா. நுண்ணறிவு நுவலும் நுட்பமான சொற் பா; ஞானப் பா. பாவினங்களிலேயே சான்றாண்மையைச் சாற்றிடத் தகுந்த சான்று பா!

அதனால், அந்தப் பா புலமை உலகுக்குப் பொதுப் பாவாக, மறை 'பா'வாக விளங்கும் சக்தியைப் பெற்றது என்ற அருமையை, வெண்பாவுக் குள் நுழைத்து அதற்குப் பெருமையைச் சேர்த்தவர் பொருளுரை நாயகர்! சான்றோர் எனில் சால்புடையவர்கள், உயர்ந்த பண்பில் வைரம் பாய்ந்தவர்கள் அவர்களால் மக்களைச் சான்றோர்களாக்க முடியும் என்ற ஒழுக்கமுடைய நேர்மைத் திறம் பூண்டவர்கள் அல்லவா?