பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருக்குறள் சொற்பொருள் சுரபி

திருக்குறளில் அல்லது எந்த ஒரு நூலிலும் காணும் பெயர்கள், அருஞ்சொற்கள், அந்த சொற்கள் எங்கெங்கே, எப்படியெப்படி, ஏன், எதற்காகப் பயன்பட்டன என்ற இடங்களைக் குறிப்பிட்டுக் கூறி விளக்குவதற்குச் "சொல்லடைவு” என்று பெயர் ஆகும்.

இவ்வாறு வெளிவந்த சொல்லடைவு நூற்கள்தான், புறநூனுற்றுச் சொல்லடைவு, சிலப்பதிகாரச் சொல்லடைவு, ஐங்குறு நூற்றுச் சொல்லடைவு, கம்பராமாயணம் சொல்லடைவு, பெரிய புராணம், பெருங்கதை, வில்லிபாரதம் மற்றும் கல்வெட்டுக்களைப் பற்றியும் வெளிவந்த சில் சொல்லடைவு நூற்களாகும்.

இந்தக் காலக் கட்டத்தில், பல பொருள் விளக்க அகராதிகளுக்குரிய மேற்கோள் விளக்க அகராதிகளும் வெளிவந்தன. அவற்றுள் ஒன்று திருக்குறள் மேற்கோள் விளக்க அகராதி. இதனை இயற்றியவர் தாமோதரன் என்ற தமிழ்ப் பெருந்தகை ஆவார். இந்த அரிய நூல்கள் எல்லாம் இன்று புத்தக விற்பனைச் சந்தைகளில் உள்ளனவா என்றால், ஒரு நூல்கூட இல்லை; ஒரு கடையிலும் கிடைக்கவில்லை.

எனவேதான்,'அகராதிக் கலை என்ற அரும் நூலில் டாக்டர் தா.வே. வீராசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ள அரிய ஆய்வுகளை நாம் பொன்னே போல ஏற்றுக் கொண்டு; திருக்குறள் சொற்பொருள் சுரபி' என்ற இந்த நூலுக்குக் கிடைத்த சில ஆய்வுகளை இரு கையோடு ஏந்திக் கொண்டு எழுதினோம்.

இன்று வளர்ந்து வரும் அகராதியியல் (Lexicology) வளர்ச்சிக் கேற்றவாறு, திருக்குறளில் காணும் சொற்கள் அல்லது சொற்கூறுகள் குறித்து, தமிழியல் முறையிலும், அறிவியல் ஆய்வுக்கேற்பவும் பொருள், வடிவம், சொற்பயன்பாடு, சொல்லாக்கம், சொல் வரலாறு, சொற்கூறு ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி, அகராதியியல் கண்டுரைத்த ஆய்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு, திருக்குறள் சொற்பொருள் சுரபி (Thirukkural Concordance) என்ற இந்த சொற்பிறப்பு பட்டியலைத் தயாரித்துள்ளோம்.

கல்லாரும், கற்றாரும் திருக்குறளை அனைவரும் சுலபமாகப் படித்திட ஆசிரியர் உதவியின்றிக் கற்றிட மாணவ, மாணவியர்களும் படித்துப் பயன்பெற்றிட எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள “திருக்குறள் QăTüQuměsir =#ứ” (Thirukkural Concordance) sĩg)Iứ ### ữIreò உதவியாக இருக்குமென் நம்புகிறோம். ஆசிரியர் பெருமக்களும் - பெற்றோர்களும் அன்பு கூர்ந்து இந்த நூலைப் பார்வையிட்டு கருத்துக் கூற வேண்டுகிறேன்.

அன்பன் வா. திருக்குறளார்