பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் பெருமானின் திருக்குறள் ஆய்வு

திருக்குறள், நாலடியார், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற தமிழ் ஞான நூற்களைப் போற்றியவர் வள்ளல் பெருமான். இந்த நூல்களில் உள்ள விழுமியக் கருத்துக்களை வள்ளலார் தமது அருட் பாக்களிலும், தாம் எழுதிய புத்தகங்களிலும் எடுத்தாண்டிருக்கிறார்.

இவ்வாறு பயன்படுத்துவது, அவற்றைப் பார்த்து மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டுவதற்குப் பெயர் காப்பி அடித்தல் என்பதன்று. தனக்கு முன்னே வாழ்ந்த ஞானாசிரியர்கள் எண்ணங்களை உலகுக்கு உரைத்து, மக்கள் அந்த அறிவுரைகளைப் பின்பற்றல் நல்லது என்பதனால் மட்டுமன்று, முன்னாசிரியர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் பேரின்ப வழக்கும் ஆகும்.

அவ்வாறு, வடலூர் வள்ளல் பெருமான் போற்றிய நூல்களுள் திருவள்ளுவர் பெருமானுடைய திருக்குறளும் ஒன்று. எவ்வாறு வள்ளலார் திருக்குறளை நோக்கினார் என்பதை இங்கே காண்போம்.

"திருக்குறள் ஒரு ஞான நூல். திருவள்ளுவர் ஒரு ஞானி என்பது எம் கொள்கை, ஞான நூல்கள் பலவற்றுள் சொல்லப் பெறாத உண்மைகள் திருக்குறளிலே காணப்படும்".

"ஞான நூல்களில் சுற்றி வளைத்தும், இலை மறை காயாகவும் கூறப்படும் உண்மைகள், திருக்குறளில் நேரிடையாகவும், வெளிப்படை யாகவும், அழுத்தந் திருத்தமாகவும் கூறப்படும்”.

'திருக்குறள் ஞானச் சிறப்பில், திருமந்திரம், திருவாசகம் முதலியவற்றை ஒப்பது. பதினாயிரம் பகவத் கீதையினும் உயர்ந்தது. திருக்குறளில் கடவுள் வாழ்த்து, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல், தவம், நிலையாமை ஆகிய அதிகாரங்களில் காணப்படும் கருத்துக்கள் ஞான நூலுணர்வுடையாரை இறும்பூதெய்தச் செய்வன”. -

"பின்வந்த புலவர்கள் மிகப் பலர் திருக்குறளைத் தத்தம் நூல்களுள் எடுத்தாண்டுள்ளனர். திருக்குறளை எடுத்தாள்வதும், மேற்கோள் காட்டுவதும் தமக்கும் தம் நூலுக்கும் ஒரு சிறப்பெனவே அவர்கள் கருதினர்”.

"புலவர்கள் மட்டுமன்றி, ஞானிகளும் திருக்குறளை எடுத்தாண்டும், மேற்கோள் காட்டியும் உள்ளனர். பின்னூலாசிரியர் ஒருவர் முன்னுலொன்றை எடுத்தாள்வதும், மேற்கோள் காட்டுவதும் ஒரு