பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி . 203

வியப்பன்று. அது கவி மரபும், இலக்கிய வழக்கும் ஆகும். ஆயினும் ஞான நூல் செய்யப் புகுந்த ஞானிகள் தாம் சொல்லும் ஞானக் கருத்துக்களுக்கு அரணாகத் திருக்குறளை எடுத்துக்காட்டுகின்றன. ரெனின், திருக்குறளின் ஞானச் சிறப்பை என்னென்பது'!

"இலக்கியங்களிற் சிந்தை செலுத்தாத ஞானிகளும்; உள்ளத்தைத் திருக்குறளிடத்துப் பறிகொடுத்தனரெனின், திருக்குறளினை தெய்வச் சிறப்பை, அருட்சிறப்பை, ஞானச் சிறப்பை என்னென்போம்'.

'திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள், சேரமான் பெருமான், திருமூலர், உய்யவந்தேவ நாயனார், உமாபதி சிவாசாரியார், கண்ணுடைய வள்ளலார், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகிய பெரியோர்கள் தமது அருளிச் செயல்களுள் திருக்குறட் பாக்களையும், தொடர்களையும், கருத்துக்களையும் எடுத்தாண்டுள்ளனர்".

'திருவள்ளுவர் ஞானி என்றும், திருக்குறள் ஞான நூல்களுக்கு ஞான நூல் என்று யாம் கூறின், அது மிகையாமோ?

"திருவள்ளுவர்க்கு வழங்கும் வேறு பெயர்களாகிய தெய்வப் புலவர், தேவர், நாயனார் என்பவையே அவர் ஒரு ஞானி, அருளாளர் என்பதைக் காட்டும், அவருக்குக் கோயிலெடுக்கப் பட்டது.உம் இது கருதியே”.

"இஃதுணராது, புறநானூற்றுப் புலவரோ டொருவராய், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முதலியவற்றை பாடிய பல நூறு புலவர்களுடன் திருவள்ளுவரையும் ஒரு சேர வைத்து எண்ணுதல் அபசாரம்”.

“ஞானியாகிய திருவள்ளுவரைச் சமய ஞானியாகக் கொள்ளாது, சமரச ஞானியாகவே கொள்ள வேண்டும்".

"அவர் சமயங் கடந்தவர். சமயக் கணக்கர் மதிவழி கூறா துலகியல் கூறிப் பொருளிதுவென்ற வள்ளுவர்" என்னும் கல்லாடனார் கருத்துரை காண்க”.

- வடலூர் வள்ளல் பெருமான் (இராமலிங்கரும் - தமிழும் என்ற நூலிலிருந்து)