பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியமும் - சங்க நூற்களும்; - திருவள்ளுவர் பெருமானும்

தொல்காப்பியனார், தாம் எழுதிய தொல்காப்பியம் என்ற இலக்கண நூலில்; மூன்றாம் வேற்றுமையில் ஆல் உருபைக் கூறவில்லை.

ஆனால், திருவள்ளுவர் தாம் எழுதிய திருக்குறள் நூலில் கற்றதனால் (2); உள்ளத்தால் (282, 307), களவினால் (283); இதனால் (517); அதனால் (642); நாணல் (1017); பாக்கியத்தால் (1141) என்ற குறட்பாக்களில் ஆல் உருபைக் கூறியுள்ளார்.

அஃறிணைப் பெயரில் பன்மையைக் குறிக்க உறழ்ச்சியாய்க் கள் விகுதி வருமெனத் தொல்காப்பியனார் கூறியுள்ளார். ஆனால், வள்ளுவர் பெருமான் திருக்குறளில், மற்றையவர்கள் (263); கீழ்கள் (10.75) என உயர்திணைப் பெயரில் அவற்றை எழுதியுள்ளார்.

எல்லார்தமக்கும், எல்லார் தம்மையும் என்று வழங்க வேண்டும் என்று தொல்காப்பியனார் கூறியிருக்க, எல்லார்க்கும் (582); உயிர்க்கெல்லாம் (1012); எழுவாரை யெல்லாம் (1032) என்று வள்ளுவனார் எழுதியுள்ளார்.

நீயிர் என்பதை முன்னிலைப் பன்மைப் பெயராகத் தொல்காப்பியனார் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நீ (1319, 1320) என்று அதனைத் திருவள்ளுவர் சுட்டவில்லை.

அன்னிற்றுத் தன்மை யொருமை வினையை, தொல்காப்பியனார் கூற வில்லை. பருகுவன் (1268), இலன் (205), இரப்பன் (1067) என்ற வினைகளை திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

வியங்கோள் வினை தன்மை முன்னிலையுள் வராது என்று தொல் காப்பியனார் கூறுகிறார். ஆனால், திருவள்ளுவர் காண்க, யானோ (1265); நீ வாழி (1242) ஆகியவற்றைக் கூறியுள்ளார்.

குறிப்பு :- ஆலுருபும், கள்விகுதியும், நீர் என்ற சொல்லும், பருகுவன் போன்ற மற்றவையும், புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு, குறுந்தொகை போன்ற நூல்களிற் காணப்படவில்லை.

கலித்தொகையில் கோட்டால் (42); ஐவர்கள் (26); அரசர்கள் (215); வாழிய நீ (96) என்ற வழக்குகளோடு அவை வந்துள்ளன. துமக்கு என்பதன் திரிபாகிய உமக்கு என்பது 139-வது கலி செய்யுளில் வந்துள்ளது.

புதல்வனையும், புதல்வியையும் பொதுவாய்க் குறிக்கும் சொல் - புதல்வர் என்பது. அதனை புதல்வன் என்ற சொல்லின் பன்மையெனக் கொண்டு ‘மக்களென்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது என்று பரிமேலழகர் கூறுகிறார். திருக்குறள் 67, 69, 70 என்ற மூன்று குறள்களிலும் கூறப்பட்ட மகன் என்ற சொல்லும் ஆண்பெண் இருவரையும் குறிப்பதற்குச் சான்று.

ஆனால், தொல்காப்பியனார் ஆண்மகன், பெண் மகன் என்று தொல் காப்பியத்தில் குறிப்பிடுகிறார். எனவே, புதல்வரைப் பெறுதல் என்பதற்கும் மக்கட்பேறு என்ற திருக்குறள் அதிகாரத்திற்கும் பொருள் ஒன்று தானோ?

இவ்வாறு ஒன்றுக்கொன்று வழக்குகளோ என்று ஐயங்களை எழுப்பி, சங்க நூற்களில் வந்துள்ளதால், இவற்றுள் எதெது திருக்குறள் நூலுக்கு முற்பட்டது. பிற்பட்டது என்ற வினா எழுவதால், புலவர்கள் ஆராய்ச்சிக்காக இங்கே இதனை எடுத்துக் காட்டியுள்ளோம்.