பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் வடசொற்கள் எவை?

கீதை, மனு, அர்த்த சாத்திரம் கலப்புள்ள நூலா திருக்குறள்?

திருக்குறளில் ஏறக்குறைய 49 வடசொற்கள் கலந்துள்ளதாக மொழி ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். அவை இவை :

'அலி, அந்தம், அமரர், அமிர்தம், அங்கணம், ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆயம், இந்திரன், இலக்கம், கருமம், கனம், காமம், காரணம், குணம், குலம், கோடி, சலம், சாதி, ஞானம், தண்டம், தவம், தானம், துலை, தெய்வம், தேயம், தேவர், நாகம், நாகரிகம், நாமம், பருவம், பாக்கியம், பாகம், பாவம், புரந்தரன், புருவம், பூதம், மங்கலம், மந்திரி, மதி, மணி, மாத்திரை, மானம், மாயம், முகம், முத்தம், யாமம், வித்தகர் என்பவையே அவை.

இந்த வடச் சொற்களில் பல தமிழ்ச் சொற்களே என்று, தமிழ்க் கடல் மறைமலையடிகள், மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற பலர் மொழியாய்வு செய்து நிரூபித்திருக்கிறார்கள்.

பல தமிழ்ச் சொற்களுக்கும், ஆரியச் சொற்களுக்கும், வேர்ச் சொற்கள் (Roots) ஒன்றாக இருக்கின்றன என்பதையும் சில மொழியாய்வு அறிஞர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதனால், சமத்கிருதம் என்று கூறப்படும் தமிழ்ச் சொற்களை - சமத்கிருதமா என்று எண்ணுவதற்குக் கடினமாக உள்ளது. வடமொழிக் கலப்பு திருக்குறளில் உள்ளதா?

அர்த்த சாத்திரம், மனுமிருதி, பகவத் கீதை போன்ற சமத்கிருத நூல்களிலே இருந்து, கருத்துக்களை திருக்குறள் எடுத்துள்ளது என்று சமத்கிருதப் பற்றாளர் பறையறைகின்றார்கள்.

அர்த்தசாஸ்திரம் என்ற நூல் சாணக்கியர் எனப்படும் கெளடல்யர் என்பவரால் எழுதப்பட்டதென்று சிலர் கூறுகிறார்கள். அக் கூற்று உண்மையன்று. அது கெளடல்யரால் எழுதப்பட்ட நூல் அன்று என்று அறிஞர்கள் அறைகிறார்கள்.

கெளடல்யரின் நூலைத் தழுவிப் பிற்காலத்தவர் ஒருவரால் அந்த நூல் தீட்டப்பட்டது என்ற கருத்தும் மொழி ஆய்வு உலகில் உள்ளது.

"According to this view, therefore, the "ARTHASASTRA" was

composed much later than the time of Chandragupta Maurya and many even be as fate as A.D. 300.

(— The . History and Culture of Indian Peopfe, Vol. II, P.275.]