பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருக்குறள் சொற்பொருள் சுரபி

அர்த்த சாத்திரம் கி.பி. 300-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் எழுதப்பட்டது என்றும், அவ் வப்போது காலநிலைக் கேற்றவாறு எழுதி எழுதி அதில் பின் சேர்ப்புகள் நடந்துள்ளது என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள்.

இதை நோக்குங்கால், திருக்குறளுக்குப் பிறகு எழுதப்பட்ட நூல் அர்த்த சாத்திரம், உண்மை நிலை இவ்வாறிருக்க: திருவள்ளுவர் சில கருத்துக்களை அர்த்த சாத்திரத்திலிருந்து எடுத்துக் கையாண்டார் என்பது எவ்வகையில் நியாயமானது?

மனுமிருதி கி.மு. 200-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.200-க்கும் இடையில் எழுதப்பட்டது என்றும், பலமுறை எழுதியெழுதி இந்த நூலில் சேர்த்துக் கலப்பு செய்யப்பட்டுள்ளதென்றும் ஆராய்ச்சி நூற்கள் கூறுகின்றன. It is now generały agreed that the text MANU SMÍRIT) was

formulated sometime between 200 B.C., and A.D. 200. It was possibly revised several times.

f— The History ಶnd Culture of indian People, Vol. H. P. 256.]

எனவே, மனு ஸ்மிருதி நூலிலிருந்து திருவள்ளுவர் சில கருத்துக்களை எடுக்கவில்லை. திருக்குறளிலிருந்து எடுத்துத்தான் சில பகுதிகள் மனு நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறதல்லவா?

பாரதப் போரில் பார்த்திபனுக்குக் கிருஷ்ணன் போருபதேசம் செய்த நூல் பகவத் கீதை. இன்றுள்ள கீதை, கி.மு. 200க்கும் கி.பி. 200க்கும் இடையில் உபதேசம் செய்யப்பட்டது என்பர் சில வரலாற்றாய்வாளர்கள். நாளடைவில், பிற்காலத்தில் சில பழைய ஆசிரியர்கள் பெயரால் புதிய நூல்கள் பல எழுதப்பட்டன. எடுத்துக்காட்டாக :

யாக்ளு வல்கியம், நாரதம், பிரகஸ்பதி, காத்தியாயனம் போன்ற மிருதிகள், கி.பி. 4-ம் நூற்றாண்டிற்கும் 7-ம் நூற்றாண்டிற்கும் இடையில் எழுந்த நூல்கள் அவை. வடமொழி நூல்களை அந்தக் காலத்தில் இயற்றியவர்கள், திருத்தம் செய்தவர்கள் தென்னாட்டவராகவே உள்ளனர் என்று நூலாய்வு கூறுகின்றது. அத்தகைய அவர்களே திருக்குறள் கருத்துக்களை வடமொழி நூற்களில் புகுத்தியிருக்கக் கூடுமல்லவா?

Katayayana, the Grammardian, Baudhayana, the Simiriti writer,

and possibly Apastamba also were south Indians. But, we do not know to which part of South India they belonged,

I- Masayasam and Other Languages, P. 1249.j எனவே, சமத்கிருதப் பற்றாளர்கள் கூறுவது போல திருக்குறள்

வடமொழி நூல்களில் இருந்து எந்தக் கருத்துக்களையும் இரவல் பெறவில்லை என்பதற்கு மேற்கண்ட ஆய்வுகள் சான்றாகாவா?