பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸஅத்திர பாஷ்யத்தில் சங்கராச்சாரியர் கூறுகிறார்

'திருக்குறளை இயற்றிய ஆசிரியர் தெய்வப் புலவர் ஆவர். அவருடைய தகப்பனார் அகஸ்தியர் மகனான பெருஞ் சாகரனுக்கும், திருவாரூர் புலைச்சிக்கும் பிறந்த பகவன் என்றும், அவருடைய தாயார் பிரம வமிசத்திற் பிறந்த தவமுனி என்பவருக்கும் ஒரு பிராமண மாதிற்கும் பிறந்த ஆதி என்றுங் கூறுவர்.

“இவ்வாறு கூறுவதற்குப் பழமையான சான்று ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. அஃது உண்மையாயிருப்பினும், அப் பிறப்பால் ஆசிரியர் திருவள்ளுவனார் போன்ற முனிவர்க்குக் குற்றமொன்றுமில்லை என மகாபாரதங் கூறுவது இங்கு நோக்கத் தக்கது. அஃதாவது......”

வேதங்களில் தேர்ச்சி பெற்ற முனிவர்கள் கர்ம சேஷத்தால் மானிடத்திலும், பகூஷிகளிடத்திலும் தேவப் பொது மகளிரிடத்திலும், நாலாவது வருணத்தாரிடத்திலும் பிறக்கின்றனர்."

'ருஷ்ய சிருங்கள் மானிடத்திலும், கண்வர் மயிலினிடத்திலும், அகஸ்தியரும், வலிஷ்டரும், ஊர்வசியிடத்திலும், ஸோமேச்வரர் பாம்பினிடத்திலும், அச்வினி தேவதைகள் குதிரையினிடத்திலும், விதுரர் நாலாவது வருணத்தாரிடத்திலும் பிறந்தனர்.

'அவர்களுடைய பிறப்பினால் அவருக்குள்ள சிறப்புக் குன்றாது என்பதே. அவர்கள் முற் பிறப்பிலுள்ள ஸம்ஸ்காரத்தால் இப் பிறப்பில் ஞானத்தையடைந்து முத்தி பெறலாம் என்பதைப் பெரியார் சங்கராச்சாரியார் தங்கள் ஸ9த்திர பாஷ்யத்திற் கூறியதும் நோக்கத் தக்கது. ஆசிரியர் திருவள்ளுவனாரும், அப் பிறப்பில் ஞானத்தை யடைந்து ஜீவன் முத்தி பெற்ற பெரியாருள் ஒருவராயிருக்கக் கூடும் என்பதை அவரது நூல் காட்டுக்கின்றது:

- டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி (திருக்குறள் அறத்துப்பால் பாலருரையில் கூறியுள்ளார். திருவையாறு, 15.6.1939)

குறிப்பு - மேற்கண்ட உரையாளர், திருவள்ளுவர் பெருமான் பறைச்சிக்குப் பிறந்த பகவனுக்கும், பிராமண பெண்ணிற்கும் பிறந்தவர் என்பதைத் தனது உரையின் முகவுரையில் கூறுகிறார். இந்தப் பகவன், ஆதி என்ற குலவேறு பாட்டிழிவைக் கபிலரகவல் என்ற நூலில் தான் முதன் முதல் எழுதப்பட்டுள்ளது. அதை எழுதியவர்கள் திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயரும், சரவணப் பெருமாள் ஐயரும் ஆவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.