பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 திருக்குறள் சொற்பொருள் சுரபி களங்களிலும் இதனால் உண்டாகும் இன்ப நிலையைத்தான் என்னென்பது. வாழையின் இன்பத் திறம் அது.

வாழையும், வாழையிற் கிடைக்கும் தண்டு, இலை, காய் முதலியனவும் வாழையின் பொருளதிகாரம்.

வாழையின் எல்லாப் பொருள்களும் 'மக்களுக்குத் தேவைப்படு கின்றன. அதனால் உலர்ந்த சருகும்கூட உண்கலனாகவும், தொன்னை களாகவும் உதவுகிறது.

வாழையின் அறத்திறமோ உள்ளத்தை ஒருங்கே கொள்ளை கொள்கின்றது. அறத்திறம் என்பது இங்கே ஒழுங்கு முறை. அதுவும் கரவற்ற ஒழுங்கு முறை.

சில மரங்கள் முடிச்சுகளும் - மொக்கைகளும், மலடுகளும் உடையன. வாழை பெரும்பாலும் அக் கரவுகள் உடையதன்று.

வளத்துக்கு ஏற்றபடி வஞ்சனையில்லாமல் வளர்ந்து குழந்தைகள் போல் இல்லங்களில் ஆடி அசைந்து குழைவாய் விளங்குவன.

வாழையின் ஒவ்வொரு பகுதியிலும் அவ் வொழுங்குச் சிறப்பு மேம்பட்டிருக்கிறது.

அடியில் தோன்றும் கன்றுகள், தன் தாய் வாழையைச் சுற்றி வளைத்துக் கொண்டு, அதன் ஆதரவிலும் அணைப்பிலும் அதன் மடியிலேயே அவ் வளைவு ஒழுங்கில் வளர்ந்தெழுகின்றன.

மட்டைகளும் அப்படியே, உரிக்க உரிக்க மட்டையாய் வளைந்து கவ்விப் பற்றிய அடுக்கு ஒழுங்கில் அமைந்திருக்கின்றன.

'மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் (65) என்ற பொய்யா மொழிக்கு ஏற்ப, தொட்டுணர்வுக்கு இதமாக வழு வழுப்பிலும் மென்மை யிலும் மேம்பட்டவை அல்லவா அவை?

இந்தியத் தென்பகுதியின் கடற்கரை ஓரம்போலப் - பக்க வளைவுகள் இல்லாமல்; வாழையின் இலைகள் வளைவு - ஒழுங்கும், அடுக்கு ஒழுங்கும் மிக்கு மரத்தைச் சுற்றி ஒவ்வொன்றாகவும், ஒன்றன்பின் ஒன்றாகவும், முதலில் வெண் குருத்தாய்ச் சுருண்டு தோன்றிப் - பின்பு பசிய மடல் விரித்து அவ்வொழுங்கிலேயே எல்லாம் எழுகின்றன.

வாழைப் பூ மரத்துக்கு ஒரே பூ அந்த ஒன்றை, திருக்குறள் நூல் ஒன்றை மட்டும் திருவள்ளுவர் நன்றாய் செய்தளித்ததுபோல, வாழையும் நன்றாய்ச் செய்து வழங்குகின்றது.

பூவின் மட்டையும், அடுக்கடுக்காய் - ஒவ்வொன்றாய்ச் சுற்றிலும், பெட்டித் திறப்பதுபோல் திறந்து விரித்து - உள்ளுள்ள இதழ் வரிசைகளை வெளிப்படுத்துகின்றது.

ஒவ்வோர் இதழும் ஒவ்வொரு காய். இதழும் - காய்களும் வரிசை வரிசையாய் வரிசை யொழுங்கில் திகழ்கின்றன.