பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 249

அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப் பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி அப்பொருள் எல்லாம் அறிந்திடற் குனர்வாய் ஒன்றாய் எங்கும் பரந்து நித்திய மாய் நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடல் (மணி, சமய. 227-232) என்பதால் பகவன் இலக்கணம் அறியப்படும். எண்ணுலை வடவர் சாங்கியம் என்பர். எண்ணுால் என்பது அனைத்தும் இருபத்தைந்து தத்துவமென எண்ணப்படுதலின் வந்த காரணப் பெயர். சாங்கியம் என்பது சங்கியையை உடையது. சாங்கியம் ஆனது. வடமொழித் தத்திதப் பெயர். இவ்வாறு மொழி பெயர்த்துக் கொண்டனர் வடவர்.

எண்ணுரல் திருவாரூர்க் கபிலரால் முதற்கண் ஆக்கி இவ்வுலகுக்கு அளிக்கப்பட்ட தத்துவ நூல். தலைக் கழக நாளினின்று சென்ற 2500 ஆண்டு முன் வரை இஃது எழுதாக்கிளவியாய் இருந்தது. பின்னர் கபிலர் நூலாக்கினார் என்பர் ஆராய்ச்சியாளர். மேல் நாட்டில் எழுந்த தத்துவ நூல்களுக்கும் எண்ணுாலே அடிப்படை என அறிதல் வேண்டும்.

எந்நாளில் நூல் தோன்றுகின்றதோ அந்நாளில் மக்களிடம் பரவியிருந்த பண்பாட்டின் அடிப்படையில்தான் நூற்கருத்துக்களும் அமையும் என்பது இயற்கைச் சட்டம். (திருவள்ளுவர் திருக்குறளும் பெரும்பாலும் எண்ணுற் கொள்கையின் அடிப்படையில்தான் எழுந் துள்ளது என்பது மறுக்கக் கூடியதன்று) இஃது மேல் வரும் செய்யுட்களின் உரைகளில் எடுத்துக்காட்டப் பெறும். மற்றும் நீத்தார் பெருமை ஏழாம் செய்யுள் உரையில் எண்ணுற் கொள்கை விரிக்கப்படும் அங்குக் காண்க.

இக் குறட்பாவுக்குப் பலரெல்லாம் பலவாறு பொருள் கூறினார். அவையனைத்தும் தத்தம் சமயத்தை அடிப்படையாகக் கொண்டவை. திருவள்ளுவர் சமயக் கணக்கர் மதி வழியே நூல் செய்தாரிலர்.

வள்ளுவர் உள்ளம் என்னும் இவ்வுரையின் மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் விடையும் வருமாறு :

ஆத்திகன் பகவன் என்பதற்கு மெய்யுணர்வு. அதாவது அறிவு என்று பொருள் கூறிக் கடவுள் என ஒருவர் இல்லை என்று ஆக்க எண்ணுகின்றீரா?

உரை ஆசிரியர் : ஆமாம். அறிவான தெய்வமே என்று தாயுமானாரும், அறிவை அறிவது பொருளென அருளிய குருநாதர என்று அருணகிரி நாதரும், ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு என்று இந் நூலாசிரியரும் போல.

நாத்திகன் :- அறிவு ஒன்றே பெறத்தக்கது என்று கூறிக் கடவுள் ஒருவர் உண்டு என்பதை உறுதி செய்கின்றீர்களா?